இளையராஜா மாதிரி மட்டமான மனிதரை பாக்கவே முடியாது! - பொங்கிய ஜேம்ஸ் வசந்தன்..
இசையில் இன்று வரை ஒரு கோலோச்சிய இயக்குனராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. 70களில் ஆரம்பித்து இன்று வரை இவரின் இசையில் தான் நாம் பயணித்து வருகிறோம். எத்தனை எத்தனை பாடல்கள், தமிழ் சினிமாவை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்திருப்பதே இவரின் இசையில் தான்.
இசை மாமேதையாக வளர்ந்து நிற்கும் இளையராஜாவை பற்றி அவ்வப்போது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இசையமைப்பாளராக இருந்தவரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் அவரது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார்.
இளையராஜாவை மட்டமான மனிதர் என்றும் பண்பு இல்லாதவர் என்றும் முட்டாள் தனமான செயல்களை செய்கிறார் என்றும் கண்டபடி பேசியிருக்கிறார். மேலும் இசையில் எனக்கு அவர் தான் குரு, ஆனால் தனி மனிதனாக பார்க்கும் போது அப்படி பட்ட ஒரு மட்டமான மனிதரை பார்க்க முடியாது என இளையராஜாவை பற்றி பேசியிருக்கிறார்.
சினிமாவில் இளையராஜாவை சாமி என்றே சில பேர் அழைப்பார்கள், அதற்கு காரணம் ஆன்மீகத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டவர் இளையராஜா. அப்படி பட்டவர் எப்படி இருக்க வேண்டும்? ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சகிப்புத் தன்மையுடனும், விட்டுக் கொடுத்தலும், அன்பு பரிமாறுதலும் என இத்தகைய பண்புகளை பெற்றவராக இருக்க வேண்டும். ஆனால் இளையராஜாவிடம் எதுவும் இல்லை என ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்திருக்கிறார்.
10 வருடங்களாக இந்த கோபம் ஜேம்ஸ் வசந்தனுக்கு இருந்தாலும் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு தான் இளையராஜாவை பற்றி இப்படி எல்லாம் பேச வைத்திருக்கிறது. அதாவது கூகுள் யு.எஸ்.ஏ வில் ஒரு விழா ஏற்பாடு செய்ய அதற்கு இளையராஜா சென்றாராம். அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய நிலையில் இசையை பற்றி பேசாமல் மதத்திற்கு எதிராக சில வார்த்தைகளை பேசியிருக்கிறாராம்.
உலகத்தில் ரமண மகரிஷி ஒருவர் மட்டுமே செத்து உயிர்த்தெழுந்தவர் என கூறியிருக்கிறார். இதை கேட்ட ஜேம்ஸ் வசந்தன் உலகமே நம்பி கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை பொய் என சொல்லுகிற மாதிரி பேசியிருக்கிறார் இளையராஜா. மேலும் இயேசு கிறிஸ்தவத்தையே பொய் என்பது மாதிரி பேசியிருக்கிறார். பண்பு உள்ள மனுஷன் யாராவது இப்படி பேசுவாங்களா? என்றும் ஜேம்ஸ் வசந்தன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதையும் படிங்க : இரண்டரை மணி நேரத்தில் ராஜா போட்ட ஏழு பட்டு!.. எல்லாமே ஹிட்டு!.. என்ன படம் தெரியுமா?!..
அதே மாதிரி ஆஸ்கார் விருது வாங்கிய ஏஆர் ரஹ்மானும் இசையில் ஒரு ஜாம்பவான் தான். அவரின் பண்பு எப்படி இருக்கிறது? இதுவரை யாரையாவது அவர் குறை கூறி பேசியிருப்பாரா? ஆனால் இளையராஜா மட்டும் தான் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறார் என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.