நம்ம படத்தை எல்லாம் ஆஸ்கருக்கு அனுப்புறதே பெரிய காமெடி! – சர்ச்சையை கிளப்பிய பிரபல இசையமைப்பாளர்..

james vasanthan rrr
தற்சமயம் இந்திய சினிமாவில் பெரும் பேசு பொருளாக ஆகியிருக்கும் விஷயமாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருது வாங்கிய நிகழ்வு ஆகியுள்ளது. இந்தியாவில் வெளியான ஒரு திரைப்படத்திற்கு பாடலுக்காக ஆஸ்கர் விருது பெறுவது இதுவே முதல் முறை.
ஆனால் அதே சமயம் இந்த நிகழ்வு பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்பு இந்த மாதிரியான கேட்டகிரியில் இந்திய படங்களுக்கு ஆஸ்கர் விருது கொடுத்ததில்லை. இதற்கு முன்பு ஸ்லம்டாக் மில்லியனர் என்கிற திரைப்படத்திற்காக ஏ.ஆர் ரகுமான் விருது வாங்கினார்.

RRR
ஆனால் அந்த திரைப்படமும் இந்திய திரைப்படம் கிடையாது. அதன் கதைக்களம் இந்தியாவாக இருந்தாலும் அந்த படம் ஹாலிவுட்டில்தான் வெளியானது. இதுக்குறித்து தமிழில் பிரபலமான இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்த் பேசியுள்ளார்.
ஜேம்ஸ் வசந்தனின் கருத்து:
தமிழில் பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இவர் ஆஸ்கர் குறித்து கூறும்போது “வருடா வருடம் உலக அளவில் வேற்று மொழியில் சிறந்த படத்திற்கான விருதை ஆஸ்கர் வழங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவும் அந்த விருதுக்காக படங்களை அனுப்பி வருகிறது. ஆனால் இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு படங்களை அனுப்புவதே நகைச்சுவையான விஷயம்.
ஏனெனில் இந்தியாவில் மக்களை குதுக்கலப்படுத்துவதற்காக சண்டை காட்சிகளை வைத்து படம் இயக்குகிறோம். ஆனால் அந்த மாதிரியான திரைப்படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்காது. இருந்தாலும் வருடா வருடம் ஆஸ்கர் விருதுக்கு படத்தை அனுப்பி கொண்டுள்ளோம்” என கூறியுள்ளார்.