Home latest news James vasanthan: பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது கொடூர மனநிலை: விஜயை கடுமையாக விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்

James vasanthan: பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது கொடூர மனநிலை: விஜயை கடுமையாக விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்

vijay

தமிழ் திரையுலகில் வசூல மன்னனாக இருப்பவ்ர் விஜய். தற்போது சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவரது நடிப்பில் கடைசி படமாக ஜனநாயகன் வெளிவர உள்ளது. கடந்த 9ம் தேதி வெளியாக வேண்டிய இப்படம் சென்சார் சான்றிதழ் கிடைக்கததால் படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணமாகவே இப்படத்திற்கு கடும் பிரச்சனைகள் செய்து வருவதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்த ஒரு சிலரும் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் தனது படப் பிரச்சனை குறித்து விஜய் எவ்வித கருத்துகளையும் கூறவில்லை. இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர். கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தின்போது தாமதமாகவே கருத்தினை பதிவு செய்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் , விஜய் ஒரு கோழை. தொடை நடுங்கி. அனைவரையும் பேசவிட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது கொடூரமான மனநிலை. இவரோ வாயே திறக்காமல் இருக்கிறார். படம் ரிலீஸாகவில்லை என்று அவரது ரசிகர்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு அறிவுரை கூறவாவது வாயை திறக்க வேண்டும். சொந்த பிரச்னைக்கே போராடாத இவர் எப்படி மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவார் என்று கூறினார்.

Previous articleவிஜய் படங்களை வாங்கி வச்சும் டிவியில் போடாத சன் டிவி!.. இது தொடருமா?…
Next articleஅந்த இலக்கணத்தை உடைச்ச ஜீவா! TTT வெற்றி குறித்து இளவரசு பேட்டி