கொடூர விபத்தில் சிக்கிய ஜனகராஜ்… பிரபல காமெடி நடிகருக்கு வந்த அரிய வாய்ப்பு… ஆனால் சோகம் என்னன்னா?

by Arun Prasad |
Janagaraj
X

Janagaraj

ஜனகராஜ் ஒரு அற்புதமான நகைச்சுவை கலைஞர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களுடன் காமெடியனாக பல திரைப்படங்களில் கலக்கியிருக்கிறார் ஜனகராஜ். இந்த நிலையில் ஜனகராஜ் ஒரு விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்தும் அதனால் ஒரு பிரபல காமெடி நடிகருக்கு வந்த அரிய வாய்ப்பு குறித்தும் இப்போது பார்க்கலாம்.

Janagaraj

Janagaraj

கவியரசர் கண்ணதாசனின் மகனான அண்ணாதுரை கண்ணதாசன் “அலேக் மருது” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் ராம்கி கதாநாயகனாக நடித்திருந்தார். அதே போல் இத்திரைப்படத்தில் ராம்கிக்கு இணையான ஒரு கதாப்பாத்திரமாக ஜனகராஜ் நடிப்பதாக இருந்தது.

Annadurai Kannadasan

Annadurai Kannadasan

ஆனால் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், ஒரு நாள் ஜனகராஜ், தனது ஸ்கூட்டரில் சென்றபோது விபத்து ஏற்பட்டுவிட்டது. அவர் முகம் முழுவதும் காயங்களால் நிறைந்திருந்தன. ஆதலால் அந்த கதாப்பாத்திரத்திற்கு வேறு ஒருவரை தேர்வு செய்யலாம் என முடிவெடுத்தனர்.

அதன்படி கே.பாலச்சந்தர் திரைப்படத்தில் நடித்த ஒரு நடிகரை அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என யோசனை பிறந்தது. அதன் பின் அந்த நடிகரை அத்திரைப்படத்தில் நடிக்க வைத்தனர். அவர்தான் பின்னாளில் மக்களின் கலைஞனாக திகழ்ந்த சின்ன கலைவாணர் என்று போற்றப்பட்ட காமெடி நடிகர் விவேக்.

 Vivek

Vivek

“அலேக் மருது” திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்தது. ஆனால் இதில் சோகம் என்னவென்றால் “அலேக் மருது” திரைப்படம் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை வெளிவரவில்லை என்பதுதான்.

இதையும் படிங்க: விஜயகாந்த் படப்பிடிப்பில் ரணகளம்!! கேப்டன் செய்த காரியத்தால் ஒளிப்பதிவாளரின் முகத்தில் வழிந்தோடிய ரத்தம்…

Next Story