கவுண்டமணி, செந்தில் என தமிழ்சினிமாவை நகைச்சுவை இரட்டையர்கள் ஆட்டிப்படைத்த காலகட்டத்தில் சத்தமில்லாமல் நுழைந்தவர் ஜனகராஜ். ஆனால் இவரது அனாயச நகைச்சுவை தமிழ் சினிமா ரசிகர்களை சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுக்க வைத்துவிட்டது. அதன்பிறகு இவர் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தார். அப்போது கவுண்டமணியின் மார்க்கெட் எப்படி இருந்தது என சொல்கிறார் பிரபல எழுத்தாளர் ராஜகம்பீரன். வேறு என்னவெல்லாம் சொல்கிறார்னு பார்ப்போமா…
கவுண்டமணிக்கு சம போட்டியாளர் ஜனகராஜ். எல்லா முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். காமெடியனுக்குப் பாட்டு வைப்பதில்லை. வடிவேலுவுக்கு எட்டணா இருந்தான்னு பாட்டு வச்சாங்க. ஜனகராஜிக்கு காதல் என்பது பொதுவுடைமைன்னு பாட்டு வச்சாங்க. இந்தப் பாட்டை ஜனகராஜ் தான் பாடுறாரு. நிலா அது வானத்து மேலேன்னு அவருக்குப் பாட்டு வச்சாங்க. அவர்களுக்கு என்று ஒரு முக்கியத்துவம் இருந்தால் மட்டும் தான் அவருக்கு என்று சினிமாவில் பாடல் வைப்பார்கள்.
கதாபாத்திரத்தோடு அவர் இணைவதால் கவுண்டமணிக்குக் கிடைக்காத பாத்திரம் இவருக்குக் கிடைத்தது. 80 கால கட்டத்தில் கவுண்மணிக்கு ஒரு மாற்று நகைச்சுவை நடிகராக யாரைப் போடலாம்னு யோசிச்சா அது ஜனகராஜ் மட்டும் தான் என்று இருந்தது. ஆர்எஸ்.சிவாஜியோடு இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட்.
அண்ணே நீங்க எங்கேயோ போயிட்டீங்கன்னு அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜியுடன் வந்து அடிக்கடி இந்த வசனத்தைப் பேசி கலகலப்பூட்டுவார். இயக்குனர் சந்தானபாரதியின் சகோதரர் தான் ஆர்.எஸ்.சிவாஜி. குணா படத்தில் இருவரும் இணைந்து நடித்து அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நகைச்சுவை நடிகர்களை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. மீம்ஸ்களின் டிரண்ட்ஸாக இருப்பவர் வடிவேலு தான். மனைவியின் டார்ச்சரை அனுபவிக்கும் கேரக்டர் என்றால் ஜனகராஜைத் தான் சொல்வார்கள். அரவிந்தசாமியை விட வடிவேலுவைப் பற்றித் தான் அதிகம் பேசுவார்கள்.
ஐடி கம்பெனியினரே வடிவேலுவைத் தான் மேற்கோள் காட்டி பேசுவார்கள். முதல்வரே வடிவேலுவைப் பற்றி மேற்கோள் காட்டிப் பேசுகிறார். ஊருல கூட யாரையாவது பார்த்தா என்னடா இவன் நாகேஷ் மாதிரி இருக்கான்? வடிவேலு மாதிரி நடக்குறான்னு சொல்வாங்க. அந்த அளவுக்கு நம் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே நகைச்சுவை நடிகர்கள் மாறிட்டாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
