சிவாஜியின் படப்பிடிப்பில் கோபமாக கிளம்பிய ஜனகராஜ்!.. நடிகர் திலகம் சொன்ன ஒரு வார்த்தை.. பொட்டிப் பாம்பாக அடங்கிய சம்பவம்..
தமிழ் சினிமாவில் சிவாஜி என்றாலே பயம் கலந்த மரியாதையுடன் தான் அனைத்து நடிகர்களும் நடந்து கொள்வார்கள். அன்றிலிருந்து இன்று வரை அவருக்கு என்று ஒரு தனி அங்கீகாரமே இருக்கின்றது. அதற்கு காரணம் அவரின் வேலையில் சரியாக இருப்பது தான். படப்பிடிப்பிற்கு வரவேண்டுமா? சொன்ன நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே உட்காரும் குணம்.
டேக்குகள் அதிகமாக எடுக்காத மனப்பான்மை என சொல்லிக் கொண்டே போகலாம். அந்தக் காலங்களில் சிவாஜி, எம்ஜிஆர் படப்பிடிப்பு என்றாலே யாரும் சிரித்து பேசமாட்டார்களாம். செட்டில் எப்போதும் அமைதியாக தான் இருப்பார்களாம். இப்படி இருந்த சிவாஜி படப்பிடிப்பில் ஒர் சமயம் தன் கோபத்தால் சூட்டிங்கையே கேன்சல் செய்திருக்கிறார் ஜனகராஜ்.
சிவாஜி நடிப்பில் வெளிவந்த படம் ‘ராஜமரியாதை’. இந்த படத்தில் நடிகர் கார்த்திக், சிவாஜி, ஜீவிதா, ஜனகராஜ், செந்தில், டிஸ்கோ சாந்தி போன்ற பல நடிகர்கள் நடித்து வெளியான படம். இந்தப் படத்தை துரை என்பவர் இயக்க எம்.முத்துராமன் தயாரித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் சிவாஜிக்கு உடல் நிலை கொஞ்சம் சரியில்லாமல் இருந்திருக்கிறது.
இதையும் படிங்க : படம் பார்த்ததுனால வந்த கண்ணீர் இல்ல… படம் எடுத்ததுனால வந்த கண்ணீர்!! சோகத்தையே காமெடியாக சொன்ன பிரபல தயாரிப்பாளர்…
ஊட்டி மலைப்பகுதிகளில் சூட்டிங் நடத்திக் கொண்டிருக்க தன்னுடன் ஒரு மருத்துவரையும் கொஞ்சம் உதவியாளர்களையும் அழைத்துக் கொண்டு தான் சிவாஜி படப்பிடிப்பிற்கே வந்திருக்கிறார். காரணம் தயாரிப்பாளரான முத்துராமனுக்காகத்தான். அப்போது இடைவேளி சமயத்தில் ஊழியர்கள் ஸ்நேக்ஸ் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
வரிசையாக கொடுத்துக் கொண்டிருக்கும் போது ஜனகராஜ் இன்னொரு ப்ளேட் கேட்டாராம். அப்போது ஒரு ஊழியர் இருங்க சார் வரிசையாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம்ல, பொறுங்கள் என்று கூற இதுவே பெரிசாக முற்றிவிட்டதாம்.
ஜனகராஜுக்கும் அந்த ஊழியர்களுக்கு பெரும் சண்டை வந்திருக்கிறது. அதன் காரணமாக ஜனகராஜ் கோபமாக சூட்டிங்கை நிறுத்திவிட்டு கிளம்பிவிட்டாராம். அவர் மலையில் இருந்து இறங்கும் போது சிவாஜி கையசைத்து அழைத்தாராம். சிவாஜி கூப்பிட்டதும் ஜனகராஜ் போயிருக்கிறார். அப்போது சிவாஜி ஜனகராஜிடம் ‘அவர்கள் கொடுக்கிறவர்கள், நாம் கையேந்தி வாங்கும் இடத்தில் இப்பொழுது இருக்கிறோம், இப்படி எல்லாம் பண்ணக் கூடாது’ என்று சொல்லவும் அமைதியாக இருந்து அந்த படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த செய்தியை அந்த படத்தின் தயாரிப்பாளரான எம். முத்துராமன் ஒரு பேட்டியில் கூறினார்.