Cinema History
அந்த விபத்து எல்லாத்தையும் மாத்திடுச்சு!.. ஹீரோ வாய்ப்பை இழந்து காமெடியனாக மாறிய ஜனகராஜ்!..
தமிழில் பெயர் சொன்னவுடனே அனைவரும் அறியும் காமெடியன்களில் முக்கியமானவர் நடிகர் ஜனகராஜ். சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி கொண்டு நகைச்சுவை செய்யும் கலைஞர்களால் மட்டுமே வெகு காலம் சினிமாவில் நிற்க முடியும்.
அப்படி தனி பாணியை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஜனகராஜ். தனக்கென தனி உடல்மொழியை கொண்டவர் ஜனகராஜ். ரஜினியுடன் அதிக காம்போ போட்டு இவர் படம் நடித்துள்ளார். ஜனகராஜ் ஒரு காமெடியில் வந்தால் நாம் அவரை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்போம்.
சினிமாவிற்கு வந்த ஆரம்பம் முதலே கதாநாயகன் ஆக வேண்டும் என்பதே ஜனகராஜின் ஆசையாக இருந்தது. 1978 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதி ராஜா இயக்கி வெளியான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் அறிமுகமானார் ஜனகராஜ். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது.
வாய்ப்பை இழந்த ஜனகராஜ்:
அவற்றில் எல்லாம் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஜனகராஜ். அதன் பிறகு பாலைவன சோலை திரைப்படத்திற்கு பிறகு ஜனகராஜ்க்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.
ஆனால் இந்த சமயத்தில் ஜனகராஜ் ஒரு பெரும் விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து அவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்று ஆகிவிட்டது. அந்த விபத்தின் காரணமாக ஜனகராஜின் ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது.
அதனால் இனி அவர் கதாநாயகனாக நடிக்க முடியாது என்கிற நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த விஷயத்தையே நகைச்சுவைக்கான ஒரு விஷயமாக பயன்படுத்தி சினிமாவில் பெரும் நகைச்சுவை கலைஞனாக உருவெடுத்தார் ஜனகராஜ்.