ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் 18ம் தேதியில் தயாரிப்பு நிறுவனம் தணிக்கை வாரியத்திற்கு படத்தை அனுப்பியது. படம் பார்த்து அதிகாரிகள் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்குவதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் தணிக்கை வாரியம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்திருக்கிறார்கள்.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் தணிக்கை வாரியத்தை அணுகிய போது தணிக்கை அதிகாரிகலில் ஒருவர் புகார் தெரிவிக்கிறார்.. படத்தை மீண்டும் மறுதணிக்கை செய்ய வேண்டும். அதற்கு இன்னும் கால அவகாசம் வேண்டும் என சொல்லியிஇருக்கிறார்கள் ஆனால் ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆஷா ‘சான்றிதழ் கொடுப்பதாக சொல்லிவிட்டு மீண்டும் மறுதணிக்கை என்று சொல்வதை ஏற்க முடியாது.. ஜனநாயகன் படத்திற்கு ஏற்கனவே வழங்குவதாக சொன்ன யுஏ சான்றிதழை கொடுங்கள்’ என உத்தரவிட்டார். ஆனால், உடனடியாக அந்த தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதற்கிடையில் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலேயே நடத்தலாம் என உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. இந்நிலையில்,
இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பும் காரசாரமான வாதங்களை முன்வைத்தன,தணிக்கை வாரியம் சார்பில் ‘தனி நீதிபதியின் உத்தரவுக்கு பதில் அளிக்க தணிக்கை வாரியத்திற்கு அவகாசம் கொடுக்கப்படவில்லை.. சென்சார் கிடைக்காமல் ரிலீஸ் தேதியை அறிவித்தது தவறு’ என சொல்லப்பட்டது.
அதேபோல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ‘தணிக்கை வாரியத்தின் நடைமுறைகளால் மன உளைச்சல் அடைந்திருக்கிறோம். நிறைய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.. சரியான ரிலீஸ் தேதியை கூறாவிட்டால் படத்தை வாங்கியிருக்கும் ஓடிடி நிறுவனம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கும். எனவே இதற்கு உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தன.
ஆனால் எல்லா பிரச்சனைகளையும் முடித்து உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என நீதிபதி சொல்லி வருகிறார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. அனேகமாக மற்றொரு நாள் இந்த வழக்கு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது











