ஆர்.பார்த்திபனிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் ஹெச்.வினோத். சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.. முதல் படமே நல்ல விமர்சனங்களை பெற்றதோடு படமும் வெற்றி பெற்றது. அடுத்து கார்த்தியை வைத்து இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் ரசிகர்களை அதிர வைத்தது. அதன்பின் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.
தற்போது விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் இயக்குனராக இருக்கிறார் வினோத். இந்த படத்தை அதிரடி ஆக்சன் கலந்த ஒரு அரசியல் படமாக இயக்கியிருக்கிறார் ஹெச்.வினோத். அதே நேரம் சென்சார் பிரச்சனையில் சிக்கி இந்த படம் இதுவரை வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றுக்கு ஹெச்.வினோத் கொடுத்த பேட்டி தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நான் எலக்ட்ரிக்கல் டிப்ளமோ முடிச்சிட்டு ட்ரான்ஸ்பார்மருக்கு பியூஸ் ரெடி பண்ற கம்பெனியில் வேலை பார்த்தேன். அதன்பின் ஜெனரேட்டர் சர்வீஸ் பண்ணும் வேலை பார்த்தேன்.. சென்னை கோயம்பேட்டில் எலக்ட்ரீசியன் வேலை செஞ்சிருக்கேன்.. அப்புறம் ஒரு டீக்கடையில் கூட நான் வேலை செய்திருக்கிறேன்’ என்று ஓபனாக பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்று துபாய்…
தமிழ் சினிமாவில்…
2016 ஆம்…
தமிழ் சினிமாவில்…