ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்… தொண்டர்களை ட்யூன் செய்ய இப்படி ஒரு வழியா?

by Rohini |   ( Updated:2025-03-27 07:44:33  )
vijay
X

vijay

விஜய் தற்போது ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விஜயின் கெரியரில் இதுதான் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் முழுவதுமாக அரசியலில் களம் இறங்குகிறார். இப்பொழுதே தனது அரசியல் செயல்பாடுகளில் அவ்வப்போது ஈடுபட்டும் வருகிறார்.

தனது தொண்டர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். கட்சி தொடங்கி பெரிய அளவில் மாநாட்டையும் நடத்தி இரண்டு பொதுக்கூட்டங்களிலும் கலந்து ஒரு முழு அரசியல்வாதியாக மக்கள் முன் நிற்கிறார் விஜய் .பொதுவாக யாரிடமும் விஜய் பேச மாட்டார் .அமைதியாகவே இருப்பார் என்று சொன்னவர்கள் மத்தியில் மாநாட்டை முடித்த பிறகு ஒரு ஆக்ரோஷமான விஜயை இப்போது பார்க்க முடிகிறது.

அதனால் இவருடைய அரசியல் களம் என்பது பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் ஒரு களமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக ஒரு மாற்று அரசியலை விஜயால் கொண்டுவர முடியும் என்றும் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் நடித்து வரும் ஜனநாயகன்படத்தின் முதல் சிங்கிள் குறித்த தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.

ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள். அப்போது அந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் ரிலீஸ் அடுத்த வருடம் பொங்கல் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ஏன் இவ்வளவு சீக்கிரமாகவே முதல் பாடலை வெளியிடுகிறார்கள் என்று அனைவரும் கேட்டு வருகின்றனர். இதற்கு ஒரு காரணம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஏனெனில் ஜனநாயகன் படத்திற்க்கு பிறகு விஜய் அரசியலில் முழுவதுமாக இறங்க இருப்பதால் இந்த பாடல் கண்டிப்பாக அவருடைய அரசியல் பிரவேசம் பற்றிய ஒரு பாடலாக இருக்கும். அதனால் இந்த பாடல் மூலமாக அவருடைய பிரச்சாரமும் சூடு பிடிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அந்த பிரச்சாரத்திற்கு உதவும் பாடலாக இந்த பாடலை பயன்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் இது ஒரு வகையில் விஜயின் தொண்டர்களை இப்போதிலிருந்து டியூன் செய்யும் வகையில் இந்தப் பாடல் உதவும் என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

Next Story