சொல்லி அடிக்கிறதுல கில்லி… ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு… ரெடியா நண்பாஸ்!

JanaNayagan
JanaNayagan: விஜய் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடந்த சில படங்கள் எல்லாமே 500 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்து வருகிறது. தொடர்ச்சியாக இவருடைய சம்பளம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
கோலிவுட்டின் அடையாளமாக விஜய் மாறிக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்து பரபரப்பாக வேலைகள் தொடங்கியது. கொடி அறிவிப்பு முதல் மாநில மாநாடு வரை கலை கட்டியது.
இதற்கிடையில் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை கடைசி திரைப்படமான ஜனநாயகனுடன் முடித்துக் கொள்வதாகவும் அறிந்திருக்கிறார். இதுவே ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை கொடுத்தது. அதனால் அவருடைய கடைசி திரைப்படம் ரசிகர்கள் எல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

JanaNayagan
பிரபல கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கி இருக்கிறார். பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. படம் இந்தாண்டு வெளியாகும் என நினைத்து இருந்தனர்.
ஆனால் அதுவும் தள்ளிப்போனது. பொதுவாக நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் ரிலீசான ஒரு தேதியை நிர்ணயம் செய்து விட்டால் அதில் எப்போதும் மாற்றம் ஏற்படாது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் திரைப்படத்தை ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியிட இருப்பதாக கேவிஎன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
நடிகர் விஜய் தன்னுடைய ஷூட்டிங் இன்னும் சில தினங்களில் முடித்து விடுவார் என்பதால் படக்குழு டப்பிங் உள்ளிட்ட கடைசி கட்ட பணிகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜயின் பிறந்தநாள் தினத்தில் படத்தின் பாடல் எதுவும் வெளியாகவும் வாய்ப்பிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.