அண்ணன் வேட்டை பலமா இருக்கே!... ஜனநாயகன் படத்தின் முதல் தாறுமாறு சம்பவம்!

Jananayagan
JanaNayagan: விஜய் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் சூப்பர் டூப்பர் அப்டேட் இணையத்தில் கசிந்து வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது கோலிவுட்டில் இவரை வைத்து படம் எடுத்தால் கதையைத் தாண்டி அவரின் நடிப்பிற்காக மட்டுமே 500 கோடி வசூலை குறையாமல் தட்டி சென்று கொண்டிருக்கிறது.
இதனால் தயாரிப்பாளர்கள் விஜயை வைத்து திரைப்படம் இயக்குவதை அதிக ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் பலரின் ஆசையை பொய்யாக்கும் விதமாக தான் நடிப்பில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு விஜய் அறிவித்திருந்தார்.
முழு நேர அரசியல் களத்தில் ஈடுபட இருப்பதால் தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்து ஒப்புக்கொண்ட திரைப்படங்களில் மட்டும் முடித்துவிட்டு விலகுவார் எனவும் கூறப்பட்டது. அந்த வகையில் அவருடைய சினிமா வாழ்க்கையின் கடைசி திரைப்படமாக அமைய இருக்கிறது ஜனநாயகன்.

ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். பிரபல நிறுவனமான கேவிஎன் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்தும் வருகிறார். படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட கடைசி கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்த ஆண்டு தைப்பொங்கல் தினத்தில் இப்படத்தை வெளியிடப்பட குழு திட்டமிட்டு இருக்கிறது. இதனால் இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு விட்டது.
இந்தாண்டு விஜயின் பிறந்தநாள் தினத்தில் ஜனநாயகன் படத்தின் சிங்கிள் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் வியாபாரம் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளது.
சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் 55 கோடிக்கு பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அரசியல் போட்டியை தாண்டி இது அவர்களுக்கு லாபகரமான விற்பனை என்பதால் இப்படத்தை சன் குழுமம் வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.
அதுபோல ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றி இருக்கும் நிலையில் அதன் விலை 121 கோடி வரை இருக்கும் என்ற தகவலும் கசிந்திருக்கிறது. விரைவில் இப்படத்தின் அடுத்த கட்ட வியாபாரங்களும் தொடங்கப்படும் என்ற தகவலும் கசிந்து வருகிறது.