விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் அவரின் கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படம் வருகிற 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. எனவே இந்த படத்தை காண விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். இந்த படத்தில் மமிதா பைஜூமுக்கிய இடத்தில் நடிக்க வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். மேலும் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. சுமார் ஒரு லட்சம் பேர் வரை இதில் கலந்து கொண்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான், ஜனநாயகன் படத்தில் விஜய் மற்றும் மற்றவர்களுக்கு என்ன சம்பளம்? படமெடுக்க ஆன செலவு.. படத்தின் மொத்த பட்ஜெட் என்ன? என்கிற முழு விவரம் வெளியே கசிந்திருக்கிறது.
இந்த படத்தில் சம்பளம் மட்டுமே மொத்தமாக 272.6 கோடி கொடுத்திருக்கிறார்கள். அதில், விஜய் சம்பளம் 220 கோடி, ஹெச். வினோத் சம்பளம் 25 கோடி, அனிருத்துக்கு 13 கோடி, பூஜா ஹெக்டேக்கு 3 கோடி, பாபி தியோலுக்கு 3 கோடி, மமிதா பைஜுவுக்கு 60 லட்சம், மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் சம்பளம் 8 கோடியே 60 லட்சம் கொடுத்திருக்கிறார்கள்.

மேலும், ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் 148 நாட்கள் நடந்திருக்கிறது. அதற்கான செலவு மட்டுமே 48 கோடி. மற்றபடி படத்திற்கு அரங்கம் அமைத்தது 15 கோடி, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் 5 கோடி, படத்திற்கான வட்டி 28 கோடி என மொத்தமாக 80 கோடி செலவு செய்துள்ளனர்.
மொத்தத்தில் 272.6 கோடி சம்பளம், 80 கோடி தயாரிப்பு செலவு மற்றும் வட்டி 28 கோடி என ஜனநாயகன் திரைப்படம் 380.6 கோடி செலவில் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஜனநாயகன் 700 கோடி வசூலை அள்ளினால் மட்டுமே ஜனநாயகன் படம் எல்லோருக்கும் லாபகரமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
