லியோவை கூட தாண்டாத ஜனநாயகன்!.. விஜய்க்கு இப்படி ஒரு நிலமையா?!…

#image_title
Jananayagan: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். 200 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருக்கிறார். ஆனால், இதை விட்டுவிட்டு அரசியலுக்கு போகிறேன் என சொல்லிவிட்டு கட்சியையும் துவங்கி விட்டார். இப்போது அரசியல் பணிகள் ஒருபக்கம் ஜனநாயகன் படப்பிடிப்பு ஒருபக்கம் என செயல்பட்டு வருகிறார். ஜனநாயகன் படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மம்தா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் படத்தின் ரிலீஸ் 2026 ஜனவரி 9ம் தேதி என அறிவித்திருக்கிறது படக்குழு. மே அல்லது ஜுன் மாதம் ஜனநாயகன் படம் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், ரிலீஸ் தள்ளி சென்றிருக்கிறது.
விஜய் அரசியலுக்கு செல்லவிருப்பதால் அடுத்த வருடம் இந்த படம் ரிலீஸானால் அது அரசியலுக்கு மைலேஜாக அமையும் என்பதலாயே ரிலீஸ் தேதி பொங்கலுக்கு சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் விஜய்க்கு முக்கிய ஒன்று. அரசியலில் அவர் தனது சக்தியை காட்டும் தேர்தலாக இது அமையவிருக்கிறது.

எனவே, ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்தவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்தி தவெகவுக்கு வலிமை சேர்ப்பது, பூத் கமிட்டி அமைப்பது என பல திட்டங்கள் விஜயிடம் இருக்கிறது. விஜயின் அரசியல் செயல்பாடுகளால்தான் ஜனநாயகன் ரிலீசை ஜனவரிக்கு கொண்டு சென்றார்கள் என சொல்லப்பட்டாலும் அதில் உண்மை இல்லை என்கிறார்கள்.
இப்படத்தின் ஓடிடி உரிமையை 110 கோடிக்கு வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம்தான் அடுத்த வருடத்தில் படத்தை ரிலீஸ் செய்ய சொல்லியிருக்கிறார்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். விஜயின் லியோ படத்தின் ஓடிடி உரிமை 120 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில் ஜனநாயகன் படம் 10 குறைவாகவே விற்பனை ஆகியுள்ளது. முன்பு போல ஓடிடி நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து படங்களை வாங்குவதில்லை. ஏனெனில், ஓடிடியில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதனால்தான் ஓடிடி மூலம் தயாரிப்பாளரக்ளுக்கு கிடைக்கும் லாபம் வெகுவாக குறைந்துவிட்டது.