---Advertisement---

Jananaygan: இனிமே தேர்தல் ஆணையம்தான் முடிவு பண்ணனும்!.. இப்படி செக் வச்சிட்டாங்களே!

Published on: March 18, 2026
jananayagan
---Advertisement---

விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். ஏனெனில் விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசி திரைப்படமாக பார்க்கப்பட்டது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெற்றிபெற்ற பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக ஜனநாயகன் உருவாக்கப்பட்டது.. அதேநேரம் தமிழுக்கு ஏற்றபடி சில மாறுதல்களை செய்திருந்தார்..

கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டனர்.. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. அதோடு மறுதணிக்கை செய்ய வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் இப்படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வழக்கு அங்கும் இங்கும் மாறி மாறி சென்றும் தீர்வு கிடைக்கவில்லை
. எனவே கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தணிக்கை வாரியத்திற்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றதோடு, மறு தணிக்கைக்கும் தயாரிப்பாளர் விண்ணப்பித்தார்.

ஆனால் 45 நாட்கள் கழித்து நேற்றுதான் இந்த படம் மும்பையில் மறு தணிக்கை செய்யப்பட்டது. தமிழக அதிகாரிகள் உள்ளிட்ட சிலரும் இந்த படத்தை பார்த்திருக்கிறார்கள். அப்போது சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டிருக்கனவா என சரிபார்க்கப்பட்டது.. அதேநேரம் படத்தில் நிறைய அரசியல் தொடர்பான காட்சிகள் இருப்பதால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் படத்தை பார்வையிட வேண்டும் என தணிக்கை குழு பரிந்துரை செய்திருக்கிறது. எனவே, ஜனநாயகன் திரைப்படம் கண்டிப்பாக தேர்தல் முடிந்த பின்னரே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.