விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வருகிற ஜனவரி 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் விஜயின் கடைசி திரைப்படமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர் அரசியலுக்கு செல்ல விருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்திருக்கிறார். தெலுங்கில் பாலையா நடித்து வசூலை அள்ளிய பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக ஜனநாயகன் படம் உருவாகியிருக்கிறது. அதேநேரம் தமிழுக்கு ஏற்றபடி திரைக்கதையில் சில மாறுதல்களையும் செய்திருக்கிறார்கள். குறிப்பாக விஜய் அரசியலுக்கு சென்றுள்ள நிலையில் அரசியல் தொடர்பான சில காட்சிகளும் படத்தில் இருக்கிறது.
இந்நிலையிதான் ஒரு முக்கிய தகவல் வெளியே தெரிய வந்திருக்கிறது. இந்த படத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம் 6 நிமிடங்கள் என்கிறார்கள். இதில் படம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் என்றாலும் விஜயின் கடைசிப்படம் என்பதால் 16 நிமிடங்கள் விஜய்க்கு ட்ரியூபூட் செலுத்தும் ஒரு வீடியோவை ஒளிபரப்புகிறார்களாம்.
அதாவது, அவரின் பழைய படங்களின் வந்த காட்சிகள், படப்பிடிப்பு காட்சிகள் என எல்லாவற்றையும் இணைத்து ஒரு வீடியோவை உருவாக்கி இருக்கிறார்கள் என்கிறார்கள். கண்டிப்பாக இதை பார்க்கும் விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக அழுது கொண்டேதான் தியேட்டரிலிருந்து வெளியே வருவார்கள் என்கிறார்கள்.
