விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசி படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் வருகிற 9ம் தேதி வெளியாகவுள்ளது.
அதேநேரம் இதுவரை இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. எனவே இப்படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இன்று தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே திட்டமிட்டபடி ஜனநாயகன் திரைப்படம் 9ம் தேதி வெளியாகுமா என்கிற கலக்கம் விஜய் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
ஒருபக்கம் ஜனநாயகன் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் தொடர்பான விஷயங்கள் வெளியே கசிந்து வருகிறது. ஜனநாயகன் பட அறிவிப்பு வெளியானபோது எங்க வீட்டுப் பிள்ளை எம்ஜிஆர் ஸ்டைலில் விஜய் கையில் ஒரு சாட்டையுடன் நிற்பது போல ஒரு போஸ்டரை வெளியிட்டார்கள். அப்போதே இது அரசியல் படமாக இருக்குமோ என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது.
இந்நிலையில்தான், ஜனநாயகன் படத்தில் இடம் பெற்ற ஒரு முக்கிய காட்சி வெளியே கசிந்திருக்கிறது. ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை பார்த்து ‘தல’ என விஜய் அழைப்பாராம்.. அப்போது அந்த புகைப்படத்தின் அருகே இருக்கும் சாட்டை கீழே விழ அதை எடுத்து அவர் அரசியல்வாதிகளை வெளுப்பது போல காட்சிகளை எடுத்திருக்கிறார்களாம்.
டிரெய்லரில் கூட விஜய் அரசியல்வாதிகளை சாட்டையால் வைத்து அடிப்பது போன்ற காட்சி இருந்தது. மேலும், ‘மக்களுக்கு நல்லது பண்ண அரசியலுக்கு வாங்கடானா கொலை பண்ணவும், கொள்ளையடிக்கவும் அரசியலுக்கு வறீங்க’ என விஜய் வசனமும் பேசியிருப்பார். விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில் எம்ஜிஆர் ரசிகர்களின் வாக்குகளை வாங்குவதற்காகவே படத்தில் இப்படி சீன் வைத்திருக்கிறார்கள் என்று பலரும் பேசி வருகிறார்கள்.
