latest news
ஜனநாயகன் ஓடிடியில் வெளியாக வாய்ப்பே இல்ல!.. காரணம் இதுதான்!…
விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். கடந்த 9ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை பார்க்க அவர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தார்கள்
. ஆனால் சென்சார் பிரச்சினையில் சிக்கியதால் இந்த படம் இப்போது வரை வெளியாகவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த படத்துக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தும் சென்சார் தரப்பில் மேல்முறையீடு செய்ததால் வழக்கு இழுத்துக் கொண்டு செல்கிறது.
ஒருபக்கம் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தின் நாடிய போதும் இந்த வழக்கை இங்கே விசாரிக்க முடியாது.. சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என சொல்லிவிட்டார்கள். அநேகமாக இது தொடர்பான வழக்கு வருகிற 20 அல்லது 21ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் எனத்தெரிகிறது. இன்னும் சில நாட்கள் வழக்கு நடக்கும். எனவே, ஜனவரி ஜனநாயகன் வெளியாக வாய்ப்பில்லை. அதேநேரம் பிப்ரவரிலும் வெளியாகும் என்கிற சந்தேகம்தான். ஏனெனில் தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டால் ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது..
ஒருபக்கம் படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டிருப்பதாக செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதில் உண்மையில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஏனெனில், ஜனநாயகம் படத்தை 450 கோடி அளவுக்கு தயாரிப்பாளர் வியாபாரம் செய்திருக்கிறார். அதில், தியேட்டர்கள் தொடர்பான வியாபாரம் மட்டுமே 239 கோடி என்கிறார்கள். மேலும் ஏற்கனவே டிஜிட்டல் (ஓடிடி) உரிமையை 120 கோடிக்கு வியாபாரம் பேசியிருக்கிறார்கள்.
இப்போது நேரடி ஓடிடி ரிலீஸ் என்றால் அமேசானோ அல்லது நெட்பிளிக்ஸோ 359 கோடி கொடுத்து இந்த படத்தை வாங்க முன்வரவேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை.
அதோடு ஓடிடியில் வெளியிடுவதற்காக விஜய் இந்த படத்தில் நடிக்கவில்லை. இந்த படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகளும் இடம் பெற்றிருப்பதால் அவரின் கொள்கைகளை பிரதிபலிக்கும் படமாகவும் இதை விஜய் பார்க்கிறார்.
எனவே தாமதமானாலும் ஜனநாயகன் திரைப்படம் தியேட்டரில் மட்டுமே வெளியாகும் எனத் தெரிகிறது. அதேநேரம் தேர்தல் வரை இந்த படம் வெளியாகவில்லை என்றால் கண்டிப்பாக தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் ஏற்படும். எனவே அப்போது என்ன முடிவெப்பார்கள் என்பது அப்போதுதான் தெரியவரும்.
