பைலட் மாப்பிள்ளையை பிக்கப் பண்ண ஜனனி ஐயர்!.. நிச்சயத்தார்த்தமே முடிஞ்சிடுச்சே!.. போட்டோஸ் பாருங்க!..

அவன் இவன், தெகிடி, அதே கண்கள், பலூன், பஹீரா, முப்பரிமாணம், ஹாட் ஸ்பாட் உள்ளிட்ட பல படங்களில் நடித்த க்யூட்டான கண்களுக்கு சொந்தக்காரியான ஜனனி ஐயர் தனது வருங்கால கணவரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவருடன் நிச்சயம் செய்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

இன்று செம விசேஷ நாள் போல தெரிகிறது. அடுத்தடுத்து பிரபலங்களின் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தங்கள் குறித்த செய்திகள் குவிந்துக் கொண்டே வருகின்றன. பிக் பாஸ் பிரபலமான விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தற்போது ஜனனி ஐயர் தனது நீண்ட நாள் காதலரான விமானியை நிச்சயம் செய்துக் கொண்டதாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் செட்டிலான விமானி தான் சாய் ரோஷன் அவருடன் கடந்த ஏப்ரல் 11ம் தேதியே ஜனனி ஐயர் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. ஆனால், கடந்த ஒரு வாரமாக அது தொடர்பான தகவல்கள் கசியாத நிலையில், தற்போது தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை அவரே வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை ஜனனி ஐயர் சில படங்களிலேயே நடித்திருந்தாலும், ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பு மூலம் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து வந்தார்.

அவருடைய நிச்சயதார்த்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மாப்பிள்ளையும் பொண்ணும் செம அழகு என வர்ணித்து வாழ்த்தி வருகின்றனர்.