5 அடி தங்க சிலை!...ஜிகுஜிகு உடையில் பளபள மேனியை காட்டிய வாரிசு நடிகை....
பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. தமிழில் முன்னனி நடிகையாக இருக்கும் போதே பாலிவுட்டுக்கு சென்று அங்கும் முன்னணி நடிகையாக மாறியவர்.
பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து செட்டில் ஆனார். அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர். நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடைய அவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் நடிப்பில் வெளியான ரோஹி (Roohi) திரைப்படம் பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஒரு பக்கம், எப்படியாவது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வேண்டும் என்கிற எண்ணத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அதேபோல், பொது இடங்களிலும் கவர்ச்சியான உடைகளில்தான் அவர் வலம் வருகிறார். அதிலும், சுற்றுலா சென்றால் பிகினி உடையில் அவர் கொடுக்கும் போஸ் ஒவ்வொன்றும் சூடான ரகம்தான்.
இந்நிலையில், தங்க நிற உடையில் உடலை சுற்றி மறைத்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘5 அடி தங்க சிலை நீ’ என பதிவிட்டு வருகின்றனர்.