
Cinema News
டாப் வியூவில் தாறுமாறு!.. ஜான்வி கபூர் ரெட் வெல்வட் கேக் போல சும்மா திணறடிக்கிறாரே!..
இந்திய திரைப்பட துறையில் பிரபலாமனவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவர் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்த ஸ்ரீதேவி தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து இந்திய அளவில் பிரபலாமானார்.
சில ஆண்டுகளுக்கு முன் துபாயில் ஹோட்டல் ஒன்றில் வழுக்கி விழுந்து அடிபட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மகாராஷ்ட்ரா மாநிலம் அவருக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டது.
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் 2018ம் ஆண்டு தடக் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ரூஹி, மிலி, பவால், உலாஜ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான தேவரா படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்திற்காக பாராட்டுகளையும் பெற்றார்.
அதையடுத்து நடிகர் ராம்சரணுடன் இணைந்து நடித்து வருகிறார் ஜான்வி கபூர். அம்மா ஸ்ரீதேவி நடிப்பால் பலரையும் வியக்க வைத்த நிலையில், ஜான்வி கபூர் தனது கவர்ச்சியை காட்டி கிறங்கடித்து வருகிறார்.
நாகார்ஜூனாவின் இரண்டாவது மகன் அகில் அக்கினேனிக்கு ஜோடியக தீரா படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்தி மற்றும் தெலுங்கில் கலக்கி வரும் ஜான்வி தற்போது தமிழிலும் கலமிறங்கி உள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சற்குணம் இயக்கவுள்ள வெப் சீரிஸில் ஜான்வி இணையப்போவதாக கூறப்படுகிறது.
ஜான்வி படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் தன் புகைப்படங்களையும் தன் காதலன் ஷிகர் பஹாரியாவுடன் எடுக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். ஜீ சினிமா விருது நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருது ஜான்வி கபூருக்கு வழங்கப்பட்ட நிலையில், அதற்காக, அவர் சிவப்பு நிற ஆடையை அணிந்து கவர்ச்சி தூக்கலாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.