ஆர்யாவுக்கு ஜோடி ஜான்விகபூரா?.. தீப்பொறி ஆறுமுகமாக வெடித்த போனிகபூர்.. ட்விட்டரில் பதிலடி..

Published on: February 3, 2023
aarya
---Advertisement---

பாலிவுட்டிலும் சரி கோலிவுட்டிலும் சரி 80கள் காலகட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக பயணித்தவர் ஸ்ரீதேவி. தமிழில் கிடைத்த பேரும் புகழும் கொஞ்சம் கூட குறைவில்லாமல் ஹிந்தியிலும் கிடைத்தது. இரு மொழிகளிலும் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாகவே விளங்கினார்.

இவர் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் அடைக்கலமாகி விட்டார். இவர்களுக்கு இரு மகள்கள். மூத்த மகளான ஜான்வி கபூர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனிகபூர் படங்களை தயாரிக்கும் பணியில் இருக்க தமிழில் அஜித்தை வைத்து மட்டும் தொடர்ந்து 3 படங்களை தயாரித்து தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார்.

aarya1
karthi

இந்த நிலையில் இன்று போனிகபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதாவது 2010 ஆம் ஆண்டு லிங்குசாமி தயாரித்து இயக்கிய படமான பையா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் லிங்குசாமி இருப்பதாகவும் ஆனால் அந்த இரண்டாம் பாகத்தில் கார்த்திக்கு பதிலாக ஆர்யா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

மேலும் பையா படத்தில் ஹீரோ, ஹீரோயின் பெங்களூரிலிருந்து மும்பை பயணம் செய்யும் போது நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது இந்த பையா – 2வில் துபாயில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு காட்சிகள் தயாராக போகிறதாம். இதற்கான ஏற்பாடுகளில் லிங்கு சாமி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில்,

aarya2
aarya2

ஆர்யாவிற்கு ஜோடியாக ஜான்விகபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறினர்.இதை மறுத்து தான் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதாவது ஜான்வி கபூர் எந்த தமிழ் படங்களில் நடிக்க வில்லை எனவும் தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் அந்த பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பில் இருந்து ஏன் தன் மகளை கோலிவுட் பக்கமே அனுமதிக்க மாட்டிக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.இதற்கு முன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க கேட்ட பொழுதும் மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.