தல ரசிகர்களை மிஞ்சும் வகையில், வேற லெவல் மாஸ் காட்டிய நடிகை!!
நடிகை ஶ்ரீதேவியின் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர், ஆகியோரின் மகளான ஜான்வி கபூர், அம்மா ஶ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு பாலிவுட் உலகில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் போனி கபூர் தயாரித்த ஹிந்தி படங்கள் அனைத்தும் தோல்வியடைந்து பெரும் நஷ்டத்தில் இருந்தார். அதன் காரணமாக ஶ்ரீதேவி மீண்டும் நடிக்க ஆரம்பத்தார்.
நடிகை ஶ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கலீஷ் என்ற ஹிந்தி படத்தில் நடிகர் அஜித் நட்பு முறையில் ஒரு காட்சியில் மட்டும் நடித்த போது, கணவருக்கு கால்ஷீட் கொடுத்து உதவும்படி கேட்டதாக தகவல் கசிந்தது.
அதற்கு மதிப்பு கொடுத்து ஶ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் நடிகர் அஜித், போனி கபூருக்கு 3 படங்கள் நடித்து கொடுக்க ஒப்புக்கொண்டார்.
நடிகர் அஜித் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக வரும் 24 ஆம் தேதி உலகம் முழுதும் ரீலீஸ் ஆக உள்ள "வலிமை" திரைப்படத்தின் தயாரிப்பாளர் மகளான ஜா கபூர், வலிமை திரைப்படத்தை "லீ கிராண்ட் ரெக்ஸ்" என்ற உலகின் மிகப் பெரிய திரையரங்கில் பார்கப்போவதாக வெளியான தகவல், அஜித் ரசிகர்களை மிஞ்சும் வகையில் உள்ளது