எல்லாம் வீணாப்போச்சே!.. ஜப்பான் படத்தால் இத்தனை கோடி நஷ்டமா?!..
jappan movie: கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜப்பான். தீபாவளி ரிலீஸாக இப்படம் வெளியானது. கார்த்தியின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சர்தார் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து பல கோடிகளை வசூலித்து கார்த்திக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
எனவே, ஜப்பான் படம் மீதும் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதொடு, பத்திரிக்கையாளராக இருந்து இயக்குனராக மாறிய ராஜு முருகன் இயக்கிய படம் இது. அவர் ஏற்கனவே குக்கு, ஜோக்கர் என ஆகச்சிறந்த திரைப்படங்களை இயக்கியவர். சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுவர்.
இதையும் படிங்க: சூர்யாவுக்கு நாலு நாளா நடிப்பு வரல!. கோபத்தின் உச்சிக்கு போன இயக்குனர்!.. அட அந்த படமா?!..
அவர் கார்த்தியின் கூட்டணி அமைத்ததால் கண்டிப்பாக ஜப்பான் படம் பெரிய வெற்றியை பெறும் என கருதப்பட்டது. தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு போட்டியாக இப்படம் வெளியானது. ஆனால், படம் வெளியானது முதலே இப்படம் நெகட்டிவ் விம்ர்சனங்களை பெற்றது.
சிலரோ ‘சில குறைகள் இருந்தாலும் படம் நன்றாகத்தான் இருக்கிறது. இவர்கள் கழுவி ஊற்றுமளவுக்கு மோசமில்லை’ என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். ஒருபக்கம் பல தியேட்டர்களில் இப்படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டுவிட்டது. சில தியேட்டர்கள் இப்படத்தை தூக்கிவிட்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை போட்டு விட்டனர்.
இதையும் படிங்க: மாமாக்குட்டியாக ரெடி!.. லாங் டிரைவ் போலாமா செல்லம்!. ஏக்கத்துடன் பார்க்கும் ஷிவானி நாராயணன்…
மொத்தத்தில் ஜப்பான் படம் கார்த்திக்கு ஒரு தோல்விப்படமாக அமைந்துவிட்டது. இந்நிலையில், இந்த படத்தால் இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு ரூ.30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிசல்ட்டால் சேட்டிலைட் உரிமையை எந்த நிறுவனமும் வாங்கவில்லை. இதில் ரூ. கோடி நஷ்டம்.
அதேபோல், தமிழகத்தில் இப்படம் தயாரிப்பாளருக்கு ரூ.20 கோடி வரை பங்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5 கோடி வந்தாலே ஆச்சர்யம் என சொல்கிறார்கள். எனவே, இதில் ரூ.15 கோடி நஷ்டம் என மொத்தம் 30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜோதிகா தான் வேண்டும்..! அசினை திட்டம் போட்டு தூக்கிய சூர்யா..! எந்த படத்தில் தெரியுமா?