Connect with us
Vijayakanth

Cinema History

விஜயகாந்த் சொன்ன கை தத்துவம்… அந்த சிரிப்பு யாருக்கும் வராது…

விஜயகாந்த்துக்கு இன்று 72வது பிறந்தநாள். இதையொட்டி அவரது ரசிகர்களும், தொண்டர்களும் பல்வேறு இடங்களில் இந்தத் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

விஜயகாந்த் எம்ஜிஆர் போல. யாரையும் சாப்பிடாம விடமாட்டாரு என்கிறார் பிரபல சண்டைப் பயிற்சிக் கலைஞர் ஜாக்குவார் தங்கம். விஜயகாந்த் உடனான அனுபவங்கள் குறித்து மேலும் என்னென்ன சொல்கிறார்னு பார்ப்போமா…

நெல்லை சுந்தரராஜன்னு பைட் மாஸ்டர் எங்க ஊர்க்காரர். அவர் வந்து விஜயகாந்த் சிலம்பம் கத்துக்கணும்னு ஆசைப்படறாரு. சொல்லித் தரீயான்னு கேட்டாரு. விஜயகாந்த் சார் முதல்ல என்னைப் பார்த்ததும் சுத்துன்னு சொன்னாரு. கரகரன்னு கம்பை சுத்துனதும் கைதட்டிட்டாரு.

அப்புறம் கத்துக்கறேன்னாரு. எம்ஜிஆர் எப்படியோ அதே மாதிரி இவர் சாப்பாடு கொடுக்காம அனுப்பமாட்டாரு. எல்லாரும் பொழைக்கணும்கற நல்ல எண்ணம் அவருக்கு. மனுஷனுக்குக் கொடுத்து வாழணும். மிருகம் தான் எடுத்து சாப்பிடும்னு சொன்னாரு. அதுக்குத் தான் நமக்கு ரெண்டு கை படைச்சிருக்கான்னு சொன்னாரு. நம்மால என்ன முடியுமோ அதைக் கொடுக்கணும்னாரு.

vijayakanth

vijayakanth

இதுக்கு மேல வந்தா என்ன செய்வீங்கன்னு கேட்டதுக்கு அதை செஞ்சே காமிச்சிட்டாரு.சாலிகிராமத்துல ஒரு வீடு கட்டி அதுல ஆஸ்பத்திரி ஆரம்பிச்சி அதுல எல்லாருக்கும் ப்ரீ. மருந்து, மாத்திரை, ஊசின்னு எல்லாருக்கும் கொடுத்தாரு.

ஞாயிற்றுக்கிழமைல செக் எழுதிக்கிட்டே இருப்பாரு. படிக்கிற பசங்க படிக்க முடியாம கஷ்டப்படும்போது அவங்களுக்குத் தேவையானதை செய்வாரு. புதுசா கார் வாங்கும்போது கூட எங்கிட்ட வந்து காட்டினாரு. அதைக் காட்டணும்கற அவசியமே இல்ல. இருந்தாலும் அவர் அதை செய்தாரு.

அதெல்லாம் நான் கண்ணால நேருல பார்த்தேன். அவருக்கு வெள்ளந்தி சிரிப்பு. அவர் மாதிரி யாரும் சிரிக்க மாட்டாங்க. எதிரியாகவே இருந்தாலும் சண்டை போடுவாரு. ஆனா அணைச்சிக்குவாரு. எங்க போனாலும் என்னைக் கூட்டிட்டுப் போவாரு. நடிகர் சங்க எலெக்ஷன்ல கூட ஜெயிக்கும்போது என்னைக் கூடவே வச்சிக்கிட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top