தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோ? விழி பிதுங்கி நிற்கும் ஜேசன் சஞ்சய்
Jason Sanjai: அப்பாவைப் போல மகனும் இந்த சினிமா துறையில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வருவார் என எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஆரம்பமே இப்படியா என்பதைப் போல இருக்கிறது ஜேசன் சஞ்சயின் நிலைமை. என்னதான் அப்பா இந்த கோலிவுட்டில் ஒரு பெரிய வசூல் சக்கரவர்த்தியாக இருந்தாலும் அவருடைய இன்ஃப்ளுயுன்ஸ் இல்லாமல் தானாக வாய்ப்புகளை தேடி அலைந்தார் சஞ்சய்.
கனடாவில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்புகளை படித்து முடித்து இந்தியா வந்ததும் எடுத்ததுமே ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்தார். லைக்கா நிறுவனத்துடன் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆனதும் ஜேசன் சஞ்சய் மீது ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கையெழுத்து ஒப்பந்தமானதோடு சரி. அதற்கான எந்த ஒரு முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: வணங்கானில் பட்ட அடி சாதாரண அடியா? சுதா கொங்கராவை அலைய வைக்கும் சூர்யா
இது நாள் வரை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இன்னும் அவருடைய படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஏன் ஒரு பூஜை கூட போடப்படவில்லை. என்னதான் நடக்கிறது என்று பார்த்தால் லைக்கா நிறுவனத்திற்கு ஏகப்பட்ட பொருளாதார நெருக்கடி. வேட்டையன் படம் ரிலீஸ் ஆகி லைக்காவை காப்பாற்றுமா என்ற நிலையில் தான் அந்த நிறுவனத்தின் நிலைமையே இருக்கிறது.
அதுவும் ஜேசன் சஞ்சய் ஆரம்பத்தில் இருந்தே அவருடைய படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் வந்து போய் விட்டார்கள். முதலில் துருவ் விக்ரம் .அடுத்து கவின், ஹரிஷ் கல்யாண், அதர்வா என பல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கடைசியில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் இந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்ற ஒரு செய்தியும் வெளியானது.
இதையும் படிங்க: பிரியங்காவுக்கு விழுந்த செருப்படி… கோமாளிக்கும் குக்குக்கும் என்ன சம்பந்தம்? ஷாக்கிங் தகவல்!
ஆனால் அதுவுமே இன்னும் பேச்சு வார்த்தையில் தான் இருக்கிறதாம் .இந்த படத்தில் சந்தீப் கிஷன் நடித்தால் நன்றாக இருக்கும் என சஞ்சய் வைக்காவிடம் சொல்லி இருக்கிறாராம். லைக்காதான் இனிமேல் பேச்சு வார்த்தை நடத்தி அதற்கான அடுத்த கட்ட முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இதைப் பற்றி கோடம்பாக்கத்தில் கூறும்போது ஒருவேளை ஜேசன் சஞ்சய் படம் நடக்காமல் கூட போகலாம் என்றும் சொல்கிறார்கள். அதற்கு காரணம் லைக்காவின் பொருளாதார நெருக்கடி தான் என சொல்லப்படுகிறது.