விஜய் பேரையே கெடுத்திருவார் போல! ஏன் அதையே பிடிச்சு தொங்குறீங்க? ஜேசனை விளாசும் பிரபலம்
Jason Sanjay: தமிழ் சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. நெப்போட்டிசம் என்றே கோலிவுட் மாறிவிடும் போலிருக்கிறது. அந்தளவுக்கு பிரபலங்களின் வாரிசுகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். தற்போது இயக்குனராகும் ஆசையில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் உள்ளே நுழைந்திருக்கிறார்.
முதல் அறிமுகமே பெரிய நிறுவனத்துடன் என்கிற போது அவர் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் கூடியிருக்கிறது. சரி லைக்கா தயாரிப்பு. எந்த நடிகரை வைத்து படம் பண்ணப் போகிறார் என்ற ஒரு கேள்வியும் எழுந்து வருகிறது.
இதையும் படிங்க: பாடல் வரிகளை பார்த்து நாள் முழுவதும் அழுத எம்.எஸ்.வி!.. எந்த பாடல் தெரியுமா?…
அதுமட்டுமில்லாமல் லைக்கா இந்தப் புதிய படத்திற்கான இசை அனிருத் பெயரை பரிந்துரைக்க ஜேசன் சஞ்சயோ ரஹ்மான் வாரிசான அமீனை கேட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதர்வா, கௌதம் கார்த்திக், ஹரீஸ் கல்யாண், துருவ் விக்ரம் இவர்களில் ஒருவரை ஹீரோவாக்கும் எண்ணத்தில் ஜேசன் விஜய் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆக மொத்தம் இந்த கூட்டணி அமைந்தால் ஒட்டுமொத்த படமும் நெப்போட்டிசன் ப்ராடக்ட்டாகவே இருக்கும் என்பதால் லைக்கா இதை விரும்பாது என்றும் ஏன் விஜய் கூட இதை விரும்ப மாட்டார் என்றும் ஒரு பிரபல பத்திரிக்கையாளர் கூறினார். ‘மேலும் ஹரீஷ் கல்யாண், அதர்வா, கௌதம் கார்த்திக் இவர்களையே ஏன் பிடிச்சு தொங்குகிறீர்கள்?
இதையும் படிங்க: 39 வயசுலயும் சும்மா கின்னுன்னு இருக்கேன்!.. நீங்க என்னடா பாடி ஷேம் பண்றது.. பட்டாசா வெடித்த பிரியாமணி!
அவர்கள் எதுவும் தமிழ் படம் பார்க்கிறார்களா? இல்லை வேறு மொழி படமாவது பார்க்கிறார்களா? கதை கேட்பதில் ஏன் இப்படி சொதப்புகிறார்கள்? இப்படி இருக்கும் அந்த நடிகர்களை ஜேசன் சஞ்சய் ஏன் தேர்வு செய்ய துடிக்கிறார்? ஏன் ஒரு புதுமுக நடிகரை அறிமுகப்படுத்தாலாமே?
ஒரு ஆடிசன் வைத்து நடிகர்களை தேர்வு செய்யலாமே? எத்தனையோ திறமையான நடிகர்கள் வெளியில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லையா? விஜயின் மகன் என்ற ஒரு விசிட்டிங் கார்டு இருக்கே. அதுபோதுமே. படத்தை ஓட்டிடலாம். அதையும் தாண்டி கதையும் நல்ல படியாக அமைய வேண்டும். அதனால் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துங்கள். லைக்காவிற்கும் இது என்னுடைய வேண்டுகோள்’ என அந்த சினிமா பத்திரிக்கையாளர் கூறினார்.
இதையும் படிங்க: அட தொட்டதுக்கெல்லாம் சினுங்குவாரு போல – கமல், ஸ்ரீதேவி போஸ்டரை பார்த்து விரக்தியில் ரஜினி எடுத்த முடிவு!
எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயை அறிமுகம் செய்து வைத்தாலும் அதன் பிறகு தான் ஒரு இயக்குனரின் மகன் என்பதை எந்த இடத்திலும் விஜய் காட்டிக் கொள்ளவில்லை. தளபதி என்ற இடத்தை பிடிப்பதற்கு விஜய் எந்தளவுக்கு உழைப்பை கொடுத்திருக்கிறார் என்பதையும் ஜேசன் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த பத்திரிக்கையாளர் கூறினார். ஆனால் கதை எல்லாம் தயாராகி ஹீரோ மற்றும் ஹீரோயின் எல்லாம் முடிவான பிறகு கண்டிப்பாக ஜேசன் சஞ்சய்க்கு விஜய் தன்னுடைய அறிவுரையை கொடுப்பார் என்றும் அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.