வாரிசு பிரபலங்கள் லைக்காவை வச்சு செய்றத விடலை போலயே!.. ஜேசன் சஞ்சயின் படக்கதை இதானாம்...

by Akhilan |   ( Updated:2024-09-09 13:20:19  )
வாரிசு பிரபலங்கள் லைக்காவை வச்சு செய்றத விடலை போலயே!.. ஜேசன் சஞ்சயின் படக்கதை இதானாம்...
X

Jason Sanjay

Jason Sanjay: தளபதி விஜயின் மகன் இயக்க இருக்கும் முதல் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கும் நடிகர் குறித்த முக்கிய அப்டேட்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

தளபதி விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு தளபதி தன்னுடைய சினிமா கேரியரில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதையும் படிங்க: கோட் படத்தில் எஸ்.கே, ஜீவன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவங்கதானா? நல்லா இருக்கே!

இதே நேரத்தில், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தன்னுடைய தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் வழியில் இயக்குனராக கோலிவுட் காலடி எடுத்து வைக்கிறார். இது குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு லைக்கா நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

இயக்குனராக ஜேசன் சஞ்சயை லைக்கா அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் முதற்கட்ட அறிவிப்பு ஜேசன் கையெழுத்திட்ட புகைப்படத்துடன் வெளியானது. ஆனால் அவருடன் விஜயோ, சந்திரசேகர் இல்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமான செய்தியாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க இருக்கும் நடிகர் யார் என்ற கேள்வி எழுந்து வந்தது. இதில் பல முன்னணி பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டது. விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான் என பல பிரபலங்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.

இதையும் படிங்க: விஜயுக்கு அண்ணியா கேட்டப்ப நோ சொன்ன பிரபல நடிகை… ஆனா பின்னாடி நடந்து செம பிளான்…

அந்த வகையில் தற்போது இப்படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படத்தில் தனுஷின் தம்பியாக நடித்திருந்த சந்தீப் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறார்.

Jason_Sandeep

இதை தொடர்ந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இருக்கும் நிலையில் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இத் திரைப்படம் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதையாக தான் அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: நாங்க பேசிக்க மாட்டோமா? வெங்கட் பிரபுவை ஒரே மாதிரி கலாய்த்த அஜித் விஜய்

ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படமும் கிரிக்கெட் கதையை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது. ஆனால் அப்படத்தின் தோல்வியால் தற்போது வரை திரைப்படம் ஓடிடியில் கூட வெளியாகாமல் முடங்கிக் கிடக்கிறது.

தற்போது ஜேசனும் இதே கதையை உருவாக்க இருப்பது ரசிகர்களிடம் விமர்சனத்தை உருவாக்கி இருக்கிறது. வேட்டையின் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர் இப்படத்தின் அறிவிப்பு குறித்த தகவல்கள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story