மூன்றாவது தலைமுறையாக சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார் விஜயின் வாரிசு. எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு சிறந்த இயக்குனராக அவரது மகனான விஜயை நல்ல முறையில் வழி நடத்தினார். அதே போல் விஜயின் வாரிசான ஜேசன் விஜயும் இப்போது சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார்.
திரைப்பட பள்ளியில் முறையாக கல்வி பயின்று இன்று ஒரு இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார் ஜேசன் விஜய். எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீர் சர்ப்ரைஸை கொடுத்தது லைக்கா நிறுவனம். லைக்கா நிறுவனத்தின் மூலம் தன்னுடைய இயக்குனர் அறிமுகத்தை பதிவு செய்தார் ஜேசன் விஜய்.
இதையும் படிங்க : ‘கடைசி விவசாயி’ நல்லாண்டி வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா?!.. அட பாவமே!…
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் கூறும் போது ஏற்கனவே விஜய் தன்னுடைய மகன் ஒரு இயக்குனராக வேண்டும் என்றே ஆசைப்படுகிறார் என்றும், பிள்ளைகள் ஆசையை நிறைவேற்றுவது தானே பெற்றோர்கள் கடமை. அதனால் அவர்கள் வழியை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்றும் தன் மகனை பற்றி கூறினாராம்.
லண்டன் மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளில் திரைப்பட கல்வியை முறையாக பயின்று வந்துள்ள ஜேசன் விஜய் இயக்குனரானது ஒரு பக்கம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும் அவர் யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற ஆவல் அனைவர் மத்தியிலும் இருந்தது.
இந்த நிலையில் ஜேசன் விஜய் பேட்டியில் கூறும் போது வளர்ந்து வரும் நடிகர்கள் அல்லது பிரபலமான நடிகர்களை வைத்து தான் படம் எடுக்க வேண்டும் என்றும் கண்டிப்பாக தன்னுடைய அப்பாவை வைத்து பண்ணப் போவதில்லை என்பது மாதிரி கூறியிருந்தாராம்.
இதையும் படிங்க : நான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!..
ஒரு நல்ல கதை களத்தோடுதான் படத்தை பண்ணப் போவதாகவும் கூறினாராம். அதே போல் எஸ்.ஏ.சியும் ஒரு பேட்டியில் ஜேசன் விஜய் அவருடைய முதல் இயக்கத்தை விஜய் சேதுபதியை வைத்து பண்ண வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருந்தாராம்.
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…