ராயன் எல்லாம் இல்ல… ஜேசன் சஞ்சய் படத்தில் இதுதான் ஹைலைட்!… ஹீரோவே சொல்லிட்டாரே!..

by Akhilan |
sundeep
X

sundeep

SundeepKishan: பிரபல நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் முதல் படத்தில் தான் ஒப்பந்தமான சுவாரசிய சம்பவம் குறித்து பேசி இருக்கிறார்.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் சென்று படித்துக் கொண்டிருந்தார் என்ற தகவல் தான் பலருக்கும் முதலில் தெரிந்திருந்தது. ஆனால் திடீரென கடந்த ஆண்டு லைக்கா நிறுவனம் சார்பில் படம் இயக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது.

இதையும் படிங்க: அதென்ன 11.08? ‘விடாமுயற்சி’ டீஸர் வெளியான நேரத்துக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?

நடிகராக அப்பா வழியில் இல்லாமல் இயக்குனராக தாத்தா வழியை தேர்ந்தெடுத்தார் ஜேசன் சஞ்சய். லைக்காவுடன் கையெழுத்திடும் நிகழ்வில் இவர் மட்டும் தனித்திருக்க எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் விஜய் எனக் கூட யாருமே இல்லாதது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதைத் தொடர்ந்து இவருடைய இந்த படம் குறித்து பல யூகங்கள் இணையதளங்களில் கசிந்தது. அது மட்டுமில்லாமல் ஹீரோவாக துருவ் விக்ரம், விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான் என பல நடிகர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்தது. ஒரு கட்டத்தில் நடிகர் சுந்தீப்கிஷன் தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் கசிந்தது.

இதையும் படிங்க: மீனாவுக்கு கிடைத்த சூப்பர் ஆர்டர்… கோமதியின் கோபத்தால் மிரண்ட குடும்பம்… கோபி நிலைமை அறிந்த ராதிகா!..

இருந்தும் பல கட்ட யூகங்களுக்கு பின்னர் நேற்று படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இதில் ஹீரோவாக சுந்தீப் கிஷன் மற்றும் இசையமைப்பாளராக தமன் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் வித்தியாசமான பேக்ரவுண்ட் இருந்ததால் படத்தின் கதை ரசிகர்களிடம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் நடிகர் சுந்தீப்கிஷன், நானும் ஜேசன் சஞ்சயும் ராயன் படத்தின் ரிலீஸுக்கு முன்னரே சந்தித்தோம். அப்போதே இணைந்து வேலை செய்ய முடிவெடுத்தோம். என்னிடம் இடைவெளி இல்லாமல் 50 நிமிடம் அவர் சொன்ன கதை ஆச்சரியப்படுத்தியது.

இந்த ஸ்கிரிப்டில் அவர் கொடுத்திருக்கும் உழைப்பு தெரிந்தது. இந்த படத்தில் பேன் இந்தியா சாயல் இருக்கிறது. அவருடைய முதல் கனவு படத்துக்கு என் ஆதரவு இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story