Cinema History
ஜெமினியை நேருக்கு நேராக எதிர்த்துப் பேசிய சாவித்ரி!.. சந்திரபாபுதான் எல்லாத்துக்கும் காரணமா?
சாவிதிரி, ஜெமினிகணேசன் பிரிவுக்கு சந்திரபாபு தான் காரணம் என்று சொல்கிறார்கள். இது குறித்து சந்திரபாபுவின் சகோதரர் ஜவஹர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா!…
1965-66ல் தட்டுங்கள் திறக்கப்படும் படத்தின் அறிவிப்பு வெளியானது. இதை எழுதி இயக்கியவர் சந்திரபாபு. மனோகர் தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. ஆனால் ஜெமினிகணேசன் தான் நடித்தார். சாவித்திரி தான் ஹீரோயின். எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்கராவ், சோ, தங்கவேலு, விகே.ராமசாமி, சந்திரபாபு உள்பட பலர் நடித்தனர்.
ஜெமினிகணேசனும், சந்திரபாபுவும் நல்ல நண்பர்கள். இருவரும் நன்றாக மது அருந்துவார்கள். ஜெமினியும், சாவித்திரியும் திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் நெருக்கம் குறைய ஆரம்பித்தது. பணத்தின் மீது தான் ஜெமினிகணேசன் குறியாக இருந்தாராம். இந்நிலையில் சாவித்திரிக்கும் குடும்பம், குழந்தைகள் பற்றிய கவலை வந்துவிட்டது. தனக்கு ஒரு துணை தேவை என்று எண்ணினார்.
இந்த நிலை சந்திரபாபுவுக்கு சாதகமாகி விட்டது. ஏற்கனவே இருவரும் நெருங்கிப் பழகுவார்கள். ஆனால் இந்த நிலையில் சொல்ல வேண்டுமா? அப்போது சாவித்திரிக்கும், சந்திரபாபுவுக்கும் இடையில் நெருக்கம் அதிகரித்தது. வெளியே ஒன்றாக ஷாப்பிங் போவார்களாம். இரவில் நீண்ட நேரம் கழித்துத் தான் திரும்புவார்களாம்.
இந்நிலையில் தட்டுங்கள் திறக்கப்படும் படத்தில் திடீரென மனோகரைக் கதாநாயகனாகப் போட்டாராம் சந்திரபாபு. இதற்கு ஜெமினிகணேசன் சந்திரபாபுவுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தாராம். இந்த சண்டையில் கைகலப்பாகி விட்டதாம். சாவித்திரியுடன் இனி கனெக்ஷன் வச்சேன்னா தொலைச்சிடுவேன்னு சட்டையைப் பிடித்துக் கேட்டாராம்.
அந்த உடனே சந்திரபாபு சாவித்திரிக்குப் போன் பண்ணி விட்டாராம். அவரும் வந்துவிட, ஜெமினிகணேசன் அவரை திட்டினாராம். அதற்கு சாவித்திரியும் சந்திரபாபுவுக்கு ஆதரவா பேசிவிடுகிறார். இருவரும் சேர்ந்து மது குடித்தீர்களான்னு கேட்டார். ஆமா இதுல என்ன தப்பு? நான் படம் எடுத்து நஷ்டத்துல கஷ்டப்பட்டபோது என்னைப் பார்த்தீங்களான்னு கேட்டாராம் சாவித்திரி.
இந்த விவாதம் கடுமையாக மாறியதும் அவர் ஜெமினியின் கண் எதிரேயே மது அருந்தினாராம். நான் உங்களோட இனி வர மாட்டேன், இங்கே தான் இருக்கப் போறேன்னும் சொன்னாராம். இவன் இருக்குறது வாடகை வீடு. நாம சொந்த வீடு. காரு பங்களா இருக்குன்னு எவ்வளவோ ஜெமினி கணேசன் எவ்வளவு சொல்லியும் சாவித்திரி அவருடன் செல்லவே இல்லை’ என ஜவஹர் தெரிவித்தார்.
அதேநேரம், சந்திரபாபுவும் , சாவித்ரியும் நட்பாகத்தான் பழகினார்கள். இது ஜெமினி கணேசனுக்கும் தெரியும் எனவும் சிலர் சொல்வதுண்டு.