ஜெயிலர் சோலியை 4 நாளில் முடித்து விட்ட ஷாருக்கான்!.. குஷியில் விஜய் ரசிகர்கள்!.. ஜவான் வசூல் இதோ!
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, மிர்னா மற்றும் ரித்து ராக்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஜெயிலர் அதிகபட்சமாக 525 கோடி வசூல் ஈட்டியது வரை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜெயிலர் வசூலை வெறும் 4 நாட்களிலேயே அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் முறியடித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: லோகேஷ் வேஸ்ட்!.. எல்லாமே எடிட்டர் மேஜிக்தான்!.. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே லியோ தயாரிப்பாளர்!..
சன் பிக்சர்ஸ் மாதிரி பல நாட்கள் கழித்து பாக்ஸ் ஆபிஸ் அறிவிப்பை வெளியிடாமல், அனுதினமும் ரெட் சில்லீஸ் நிறுவனம் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.
முதல் 3 நாட்களில் 380 கோடி ரூபாயை ஜவான் படம் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை வசூலையும் சேர்த்தால் 530 கோடி ரூபாய் வசூலை ஜவான் படம் ஈட்டியுள்ளதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: இன்னும் விஜயுடன் சேர்ந்து டூயட்டா ஆட முடியும்? ‘தளபதி68’க்கு முன்னாடியே ஜோதிகா நோ சொன்ன படம்
இதன் மூலம் வெறும் 4 நாட்களிலேயே சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்த 525 கோடி ஜெயிலர் பட வசூலை ஜவான் படம் கடந்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியுள்ளது என்பதை அறிந்து ஷாருக்கான் ரசிகர்கள் சந்தோஷப்படுவதை விட ரஜினி பட வசூலை முறியடித்து விட்டார் ஷாருக்கான் என கொண்டாடி வருகின்றனர்.
அடுத்து லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லியோவும் ஜெயிலர் பட வசூலை ஒரே வாரத்தில் முடித்து விடும் என்றும் சந்தோஷப்பட்டு வருகின்றனர்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms