karthi
karthi

80களில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல திரைப்படங்களிலும் நடித்தவர் சிவக்குமார். கருப்பு, வெள்ளை காலத்திலேயே இவர் எம்ஜிஆர், சிவாஜியுடன் சில படங்களில் நடித்திருக்கிறார். கதாநாயகனாக வலம் இந்த சிவக்குமார் ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார். பல திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் கலக்கியிருக்கிறார். சில சீரியல்களும் நடித்திருக்கிறார்..

சிவக்குமாரின் மகன்கள் சூர்யா, கார்த்தி இருவருமே சினிமாவுக்கு வந்து விட்டனர். அதில் சூர்யா தன்னுடன் பல படங்களில் நடித்த ஜோதிகாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. அடிப்படையில் ஜோதிகா வடமாநிலத்தை சேர்ந்தவர். ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர். எனவே, சூர்யா – ஜோதிகா காதலை சிவக்குமார் முதலில் ஏற்கவில்லை எனவும் இருவரும் சில வருடங்கள் காத்திருந்து அவரின் சம்மதத்தை பெற்று திருமணம் செய்து கொண்டார்கள் எனவும் அப்போது செய்திகள் வெளியானது.. அதேநேரம் சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தி சொந்த ஜாதிலேயே பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய சிவக்குமார் ‘சூர்யா கல்யாணத்துக்காக பத்திரிக்கை வைக்க நானும் கார்த்தியும் ஜெயலலிதா மேடத்தை பார்க்கப் போனோம்.. அப்ப அவங்க ‘வீட்ல ஒரு லவ் மேரேஜ் ஓகே.. அத தடுக்க முடியாது.. நீயாவது உங்க அம்மா, அப்பாவை சந்தோஷப்படுத்தர மாதிரி உங்க ஜாதியில் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ’ ன்னு சொன்னாங்க.. அதை அவங்க சொல்ல வேண்டிய அவசியம் என்ன?.. பெற்றால்தான் தாயா?.. அதனால்தான் உலகமே அவங்கள அம்மான்னு சொல்லுது’ என பீல் பண்ணி பேசியிருக்கிறார்..

சிவா
முருகன் 10 ஆண்டுகளாக டிஜிட்டல் செய்தித்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் சினிரிப்போர்டர்ஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.