ஜெயலலிதாவுக்கு இவங்கள கண்டாலே காண்டாகும்.. நெருங்க முடியாத அளவுக்கு முள்வேலி போட்டு படப்பிடிப்பிற்கு வந்த சம்பவம்..

தமிழ் திரையுலகில் 1961 ஆம் ஆண்டும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை ஜெயலலிதா. ஆனால் பார்ப்பதற்கு அப்பவே மிகவும் துணிச்சலான பெண் போன்றும் மிகவும் துரு துருவென்றும் இருப்பார். சினிமாவிற்கு புதிது என்று ஜெயலலிதாவை பார்த்தால் தோன்றாது.

jaya1

jayalalitha

எல்லாம் அவரின் அம்மா மூலம் வந்த இரத்தப்பந்தம் தான். 1965 ஆம் ஆண்டு வெண்ணிறாடை என்ற படத்தில் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானார் ஜெயலலிதா. அதுவரை தமிழ் நடிகைகள் கொண்டிருந்த வழக்கத்தை முற்றிலுமாக ஜெயலலிதா மாற்றினார். அதாவது மாடர்ன் உடையில் நடித்த முதல் நடிகையாக விளங்கினார்.

இதையும் படிங்க : இரண்டே படங்களில் சரோஜாதேவியை ஓவர் டேக் செய்த ஜெயலலிதா… அப்படி எந்த விஷயத்தில் முந்துனாங்க தெரியுமா??

ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய நடிகையாகவும் புத்தகம் படிப்பது, பரதம், நடனம் என பல கலைகளில் மிகவும் ஆர்வமாக இருந்துவந்தார். இதனாலேயே எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்த நடிகையாக திகழ்ந்தார். ஜெயலலிதாவுக்கும் ஒரு ரசிகையாக எம்ஜிஆரின் மீது பற்று இருந்தது.

jaya2

jayalalitha

அதனாலேயே திரையுலகில் அனைவரும் விரும்பத்தக்க திரை ஜோடிகளாக வலம் வந்தார்கள். இருவரும் சேர்ந்து 28 படங்களில் ஒன்றாக நடித்தனர். பெரும்பாலும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் யாவும் ப்ளாக் பஸ்டர் படங்களாகவே அமைந்தன.

இந்த நிலையில் எம்ஜிஆருடன் ஜெயலலிதா கடைசியாக நடித்த படமாக ‘பட்டிக்காட்டு பொன்னையா’ என்ற படம் அமைந்தது. அந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டரின் உதவியாளராக இருந்தவரும் எம்ஜிஆருக்கு அனேக படங்களில் டூப் போட்டவருமான சாகுல் ஜெயலலிதாவை பற்றி சில விஷயங்களை கூறினார்.

mgr4

sahul

அதாவது ஜெயலலிதாவிற்கு ஸ்டண்ட் கலைஞர்களை பிடிக்கவே பிடிக்காதாம். ஏன் என்றும் தெரியவில்லை. மற்ற கலைஞர்களோடு பேசுவாரே சண்டைக் காட்சிகளில் நடிக்கும் சக கலைஞர்களோடும் மட்டும் பேசவே மாட்டார். சுத்தமாக எங்களை பிடிக்காது என்று சாகுல் கூறினார். சாகுல் சொன்னது சற்று வியப்பாக இருந்தாலும் ஏன் என்று தான் புரியவில்லை. அவரின் அனுபவத்தை அந்த படம் மூலம் ஒரு பேட்டியில் சாகுல் கூறினார்.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it