Connect with us
Rajni, JJ

Cinema History

ஜெயலலிதா, ரஜினியிடமே பாராட்டு வாங்கிய நடிகர்… இவருக்குள் இப்படி ஒரு திறமையா?..

மிமிக்ரி கலைஞர், நடிகர் படவா கோபி. இவரை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர். அவர் இயக்கிய பொய் படம் தான் இவரது முதல் படம். தனது மிமிக்ரி கலையைப் பற்றி படவா கோபி என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…

கல்லூரி நாள்களில் மிமிக்ரியை ரசித்து பல நிகழ்ச்சிகளில் நான் செய்தது பெருமளவில் வரவேற்கப்பட்டது. தொடர்ந்து நண்பர்களின் வற்புறுத்தலால் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். நிறைய வெற்றியையும் பெற்றுள்ளேன். ஜெயலலிதாவே அழைத்துப் பாராட்டிய மிமிக்ரி கலைஞர் இவர் தான்.

சன்டிவியில் அப்போது கோடீஸ்வரன் நிகழ்ச்சியை சரத்குமார் தொகுத்து வழங்கினார். அதற்குப் போட்டியாக நாங்கள் ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி ஜெயாடிவிக்குக் கொண்டு வந்தோம். அது தான் பிச்சாதிபதி நிகழ்ச்சி. அதைப் பார்த்து விட்டு ஜெயலலிதாவே பாராட்டினாராம்.

Padava gopi

Padava gopi

எம்ஜிஆர், சிவாஜி, நம்பியார், கிருபானந்தவாரியார் குரல்களில் தான் அப்போது பல மிமிக்ரி கலைஞர்களும் பேசுவார்கள். நான் தான் சச்சின் டெண்டுல்கர் வாய்ஸ்ல எல்லாம் பேசினேன். நான் கொடுத்த விசுவின் குரல் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விசு ஒரு படத்தில் அவரிடம் டொனேஷன் கேட்டு ஒருவர் வருவார்.

அவருக்குப் பதில் சொல்வார் விசு. நான் கொடுத்த அந்தக்குரல் எல்லோருக்கும் பிடித்து விட்டது. நடிகர் சோ புட்பால் விளையாடினா எப்படி இருக்கும் என்பது போல கற்பனையில் அவரது குரலைக் கொடுத்தேன். அதற்கு பயங்கரமா கிளாப்ஸ் விழுந்தது. 2000த்துக்கு அப்புறம் கிரிக்கெட்டர்ஸ் வாய்ஸ் என வேர்ல்டு லெவலில் பண்ணினேன். இங்கிலீஷ்ல மிமிக்ரி பண்ணிய முதல் ஆள் நான் தான்.

எல்லோருக்குமே இயல்பா இருக்குற கேரக்டர் தான் இந்த இமிடேஷன். அதை ஒரு சிலர் கொஞ்ச நாள்களில் விட்டு விடுகிறார்கள். நமக்கு என்ன வரும்னு அதுலயே கவனம் செலுத்தினா அந்தக் குரல் நமக்கு ஈசியா அந்தக் குரல் வந்துடும்.

நம்ம பேசிய குரல் மாடுலேஷனை நல்லாருக்கா என அவர்களிடம் கேட்கக்கூடாது. அவங்களா அதைக் கேட்டு இது ரொம்ப நல்லாருக்கேன்னு சொன்னா அது தான் சரி. எல்லாரும் வந்து வாய்ஸ் மிமிக்ரி பண்ணுவாங்க. ஆனா நீங்க வந்து ஆடிட்டியூட் மிமிக்ரி பண்ணுறீங்க…ன்னு ரஜினி சாரே சொல்லிருக்கார். இவ்வாறு படவா கோபி தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top