ஜெயலலிதாவா? அந்தம்மா அதிகமா சம்பளம் கேட்குமே?.. நினைத்தவர்களை தலைகுனிய வைத்த புரட்சித்தலைவி!...
தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் முன்னனி நடிகைகளாக வளர்ந்து விட்டால் அந்த நடிகைகளை படத்தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயங்குவது முதலில் அவர்களின் சம்பளத்திற்காக தான். நல்ல அந்தஸ்தில் உள்ள நடிகைகள் என்றால் தங்கள் சம்பளத்தை எக்குத்தப்பாக உயர்த்திருப்பார்கள். இதே நிலை தான் அந்த கால கட்டத்திலும். அந்த நேரத்தில் முன்னனி நடிகையாக இருந்தவர் நடிகை ஜெயலலிதா.
இவரின் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட நெருக்கம் இன்னும் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இந்த நிலையில் சூர்யகாந்தி படத்திற்காக நடிகை பிரமிளாவை தான் ஓகே பண்ணியிருந்தார்களாம் படக்குழு. ஆனால் வெறொரு படத்திற்காக தேவர் ஃபிலிம்ஸ் பிரமிளாவை முழு தொகையையும் கொடுத்து அழைத்து சென்று விட்டதாம். ஆகவே பிரபல எழுத்தாளராக இருந்தவரும் எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தவருமான ஏஎஸ்.பிரகாஷம் ஜெயலலிதாவை அணுகியிருக்கிறார்.
இதையும் படிங்க : மனைவி இறந்த அடுத்த நாளே படப்பிடிப்புக்கு வந்த பிரபல இயக்குனர்… அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா??
படத்தின் கதை ஜெயலலிதாவிற்கு பிடித்துப்போக சம்மதித்து விட்டாராம். சம்பளத்தை பற்றி பேசுகையில் உடனே பிரகாஷம் சூர்யகாந்தி படத்தின் இயக்குனரான முக்தா ஸ்ரீநிவாசனிடம் கேட்டிருக்கிறார் தொலைபேசியில். அப்போது அவர் பிரமிளா தான் என நினைத்து 35000 என சொல்ல ஜெயலலிதாவை ஓகே பண்ணியிருக்கிறேன் என நடந்ததை விளக்கியிருக்கிறார் பிரகாஷம். உடனே முக்தா ஸ்ரீநிவாசன் ஜெயலலிதாவா? அந்தம்மா ஒரு லட்சம் கேட்குமே என்று தயங்கியிருக்கிறார். இதையெல்லாம் பக்கத்தில் பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா பிரகாஷத்திடம் எனக்கு கதை மிகவும் பிடித்துப் போய்விட்டது.
எனக்கு சம்பளமாக ஒரு ரூபாய் கொடுங்கள் என கேட்டிருக்கிறாராம். இதை கேட்ட பிரகாஷமும் சரி முக்தா ஸ்ரீநிவாசனும் சரி ஆச்சரியத்தில் திகைத்து விட்டனராம். உடனே ஜெயலலிதாவையே நடிக்க வைத்து பிரமிளாவிற்கு பேசப்பட்ட அதே 35000 தொகையைதான் இவரும் பெற்றிருக்கிறார். இதுவும் ஜெயலலிதா சொன்னதின் பேரில் தான் அதாவது பிரமிளாவிற்கு பேசப்பட்ட தொகையையே எனக்கு சம்பளமாக கொடுங்கள் போதும் என சொன்னாராம். இந்த ஒரு ரூபாய் சம்பளம் தான் பின்னாளில் அவர் முதலமைச்சராக ஆன போது எனக்கு ஒரு ரூபாய் சம்பளம் போதும் என்று சொன்னதுக்கு அஸ்திவாரம் போட்ட படம் ஆகும் என பிரகாஷம் தெரிவித்தார்.