
Cinema History
ரஜினியுடன் நடிக்க வந்த வாய்ப்பு!. திட்டவட்டமாக மறுத்த ஜெயலலிதா!. காரணம் இதுதானாம்!..
அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அறிமுகமாகி வில்லனாக நடிக்க துவங்கி ஹீரோவாக மாறியவர் நடிகர் ரஜினிகாந்த். தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி ஸ்டைல் மன்னனாக வலம் வந்தவர். இவர் நடிக்கும் படங்கள் வசூலில் சக்கை போடு போடவே சூப்பர்ஸ்டார் எனவும் அழைக்கப்பட்டார். இவர் நடித்தால் படம் ஹிட் என்பதால் இவரின் கால்ஷீட்டை வாங்க தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்திருந்த காலம் உண்டு.

rajini
அதேபோல், அம்மாவின் கட்டாயத்தில் சினிமாவில் நடிக்க வந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. நன்றாக படித்து ஒரு கல்லூரி பேராசிரியை அல்லது எழுத்தாளர் ஆக வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது. ஆனால், காலத்தின் கோலம் அவர் நடிகையாக மாறியது. ஒரு காலத்தில் எம்.ஜி.ஆருக்கு பிரதான கதாநாயகியாக இருந்தார். சில காரணங்களால் எம்.ஜி.ஆர் படங்களில் நடிக்க முடியாமல் போகவே சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்தார்.

jayalalitha
ஒருகட்டத்தில் ரஜினிக்கு ஜோடியாக அவரை நடிக்க வைக்க ஒரு தயாரிப்பாளர் முயன்றார். ஆனால், திட்டவட்டமாக நடிக்க மறுத்தார் ஜெயலலிதா. அதற்கு காரணம் அப்போது அவர் அரசியலில் பெரிய ஆள் ஆக வேண்டும் என்கிற ஆசையில் இருந்ததுதான் காரணம். இனிமேல் நான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என அந்த தயாரிப்பாளரிடம் கூறி அனுப்பி வைத்தார். அவர் நினைத்தது போலவே அரசியலில் இறங்கி ஆட்சியையும் பிடித்து பின்னாளில் முதலமைச்சராகவும் கலக்கியவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: படப்பிடிப்பில் ஜெயலலிதா செய்த வேலை.. கடுப்பான சிவாஜி.. அதுக்கு அப்புறம் நடந்துதான் டிவிஸ்ட்!..