உண்மையிலேயே கெத்துதான்!.. எம்ஜிஆர் படப்பிடிப்பில் ஜெயலலிதா செய்யும் அட்டகாசம்!..

தமிழ் திரைத்துறையில் அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாகவும் அதிகம் சேர்ந்து நடித்து ஜோடியாகவும் எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடி அமைந்தது. அதற்கு முன் சரோஜா தேவியும் எம்ஜிஆரின் ஜோடியைத்தான் மக்கள் அதிகம் விரும்பினார்கள்.

jaya1

jayalalalitha mgr

ஜெயலலிதா சினிமாவில் நடிக்க வந்த பிறகு இவர்கள் ஜோடியையும் அதிகமாக ரசிக்க ஆரம்பித்தார்கள். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட 28 படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர். இவர்கள் நடித்த பெரும்பாலான படங்கள் ப்ளாக் பஸ்டர் படங்களாகவே இருந்திருக்கிறது.

1961ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 1965 ஆம் ஆண்டு வெண்ணிறாடை என்ற படத்தின் மூலம் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ஜெயலலிதா. பரதம், நடனம், என பல கலைகளைக் கற்றுத்தேர்ந்தவர். முதல் படத்திலேயே மக்கள் மனதை வென்றார்.

இதையும் படிங்க : நான் உலகநாயகன் இல்ல.. உலோகநாயகன்!. காமெடியா சொன்னாலும் பின்னனியில் இருக்கும் கமலின் பரிதாபங்கள்..

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே எம்ஜிஆர் மீது ஒரு ரசிகையாக தீராத அன்பு கொண்டவராக விளங்கினார். அதன் காரணமாக எம்ஜிஆருடன் நெருக்கமான நட்பில் இருந்தார். எம்ஜிஆருக்கும் ஜெயலலிதா மீது தனி பிரியமும் உண்டு.

jaya2

mgr jayalalitha

இவர்கள் இருவரும் முதன் முதலில் ஜோடியாக நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன், மற்றும் கடைசியாக நடித்த படம் பட்டிக்காட்டு பொன்னையா. இந்த நிலையில் ஒரு படப்பிடிப்பில் எம்ஜிஆர் வருவதற்கு முன்பே ஜெயலலிதா வந்து உட்கார்ந்து கொண்டிருந்தாராம்.

அதன் பின் எம்ஜிஆர் வர செட்டில் இருந்த அனைவரும் எம்ஜிஆரின் காலில் விழ, சில பேர் மரியாதை நிமித்தமாக பயம் கலந்த மரியாதையில் பரப்பரப்பாக ஓடி வணக்கம் தெரிவித்த வண்ணம் இருந்தனராம். ஆனால் ஜெயலலிதா எதையும் கண்டு கொள்ளாமல் கால் மீது கால் போட்டு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாராம்.

mgr4

sahul

அதை எம்ஜிஆர் பெரிதாக கண்டுகொள்ளாமல் ஷார்ட் ரெடியாகியதும் அங்கு இருந்த ஊழியரிடம் சரி அம்முவை கூப்பிடுங்கள் என்று எம்ஜிஆர் சொன்னாராம். அதன் பிறகு ஜெயலலிதா வந்து காட்சிகளில் நடித்துக் கொடுத்து விட்டு மறுபடியும் போய் புத்தகத்தை போய் படிக்க தொடங்குவாராம். மேலும் செட்டில் இருவரும் சரியாக பேசமாட்டார்கள் என்றும் இந்த தகவலை சொன்ன ஸ்டண்ட் மாஸ்டர் சாகுல் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இவர் ஒரு காலத்தில் எம்ஜிஆருக்கு டூப் போட்டு நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it