பி.வாசுவுக்காக முதன் முதலில் அந்த காரியத்தை செய்த ஜெயலலிதா! இப்படிலாம் நடந்திருக்கா?

தமிழ் சினிமாவில் ஒரு கமர்சியல் இயக்குனராக 90களில் வலம் வந்தவர் இயக்குனர் பி வாசு. சின்னத்தம்பி என்ற ஒரு மாபெரும் ஹிட் கொடுத்த பி வாசு கார்த்திக், சத்யராஜ், ரஜினி போன்ற பல முக்கிய நடிகர்களை வைத்து தரமான படங்களை இந்த தமிழ் சினிமாவிற்காக கொடுத்திருக்கிறார். இவருடைய தந்தை பீதாம்பரம் எம்ஜிஆர் படங்களில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்தவர்.

அதனால் எம்ஜிஆருக்கும் வாசுவின் குடும்பத்திற்கும் ஆரம்பத்தில் இருந்தே மிக நெருக்கம். ஆனால் ஒரு முறையாவது ஜெயலலிதாவை வாசு அந்த நேரில் பார்த்திருக்கிறாரா என்றால் கிடையவே கிடையாதாம்,. அவர் நடிகையாக இருந்த போது அப்பாவை வைத்து ஜெயலலிதாவை பார்த்துவிடலாம் என்ற முயற்சியிலும் அவர் இறங்கியது கிடையாதாம். ஏனெனில் அவருடைய அப்பா எக்காரணம் கொண்டும் ஷூட்டிங் பக்கமே வாசுவை அழைத்துச் செல்வது கிடையாதாம்.

இதையும் படிங்க: ரஜினி கமலைத் தாண்டி பாலசந்தருக்கு பிடித்த நடிகர்! இவர யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

அதன் பிறகு வாசு இயக்குனராக மாறிய பிறகு அவர் படங்களை பார்த்து ரசித்தவர் ஜெயலலிதா. இவர் இயக்கிய அத்தனை படங்களையும் பார்த்திருக்கிறாராம் ஜெயலலிதா .சின்னத்தம்பி, நடிகன் வால்டர் வெற்றிவேல், மன்னன் போன்ற அனைத்து படங்களையும் பார்த்து ரசித்து இருக்கிறாராம் .இதிலிருந்தே ஒரு இயக்குனராக வாசுவை ஜெயலலிதாவிற்கு பிடிக்குமாம்.

ஒரு சமயம் பிரமிடு நடராஜன் லவ் பேர்ட்ஸ் படத்தின் துவக்க விழாவிற்கு ஜெயலலிதா வரவேண்டும் என வாசுவிடம் சொல்லி இருக்கிறார். ஜெயலலிதாவை எப்படியாவது நீங்கள் தான் அழைத்து வரவேண்டும் என வாசுவிடம் வேண்டுகோளும் விடுத்திருக்கிறார். ஆனால் வாசு இதை நான் எப்படி செய்வது என தயங்க நடராஜன் எப்படியாவது போய் பேசி அவரை அழைத்து வாருங்கள் என சொல்லி இருக்கிறார்.

உடனே ஜெயலலிதாவிடம் அப்பாயின்மென்ட் வாங்கிய வாசுவை மறுநாள் ஜெயலலிதா வர சொல்லி இருக்கிறார். கோட்டைக்குச் சென்ற வாசு சிறிது நேரம் காத்திருந்து அதன் பிறகு உள்ளே சென்றிருக்கிறார். அந்த அறையில் யாருமே இல்லையாம். வாசுவும் ஜெயலலிதா மட்டுமே அமர்ந்திருந்தார்களாம். வாசுவை பார்த்து ஜெயலலிதா சொல்லுங்கள் என்ன வேண்டும் என கேட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் ஒரிஜினல் பாய்ஸும் இருக்காங்களா… அந்த சீனை சரியா பார்த்தீங்களா?

சரி வருகிறேன் என சொல்லி அனுப்பி அவர் சொன்னதைப் போல அந்த படத்துவக்க விழாவிற்கு ஜெயலலிதா சென்று இருக்கிறார்.விழா மேடையில் பேசும் போது ஜெயலைதா ‘இதுதான் முதல் முறை. இந்த மாதிரி ஒரு விழாவிற்கு நான் வருவது. அதுவும் வாசுவுக்காக வந்திருக்கிறேன். அவருடைய எல்லா படங்களையும் நான் பார்த்திருக்கிறேன் .ஸ்ரீதர் ,திருவலோக சந்தர், ராமண்ணா இவர்களுடன் நான் பயணித்திருக்கிறேன். ஒவ்வொருவரின் படங்களும் வித்தியாசமானவை. ஆனால் வாசுவை பொறுத்த வரைக்கும் அவரின் ஒவ்வொரு படங்களுக்கும் வித்தியாசம் இருக்கும்’ என வாசுவை பற்றி பெருமையாக அந்த மேடையில் பேசினாராம் ஜெயலலிதா.

 

Related Articles

Next Story