எனக்கு இதன் மீதுதான் ஆசை!.. பிடிக்காதது சினிமா மட்டுமே!.. ஜெயலலிதா கொடுத்த பேட்டி..

by சிவா |
jayalalitha
X

நடிகையாக வாழ்க்கையை துவங்கி தமிழகத்தின் முதலமைச்சராகவும் இருந்தவர் மறைந்த ஜெயலலிதா என்பது எல்லோருக்கும் தெரியும். சினிமாவின் மீது ஆர்வம் இல்லை என்றாலும் அம்மாவின் வற்புறுத்தலால் திரைத்துறைக்கு வந்தவர். வெண்ணிற ஆடை என்கிற படத்தில் அறிமானார். அதன்பின் சில படங்களில் நடித்தாலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக இவர் நடித்த அடிமைப்பெண் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

jayalalitha

அதன்பின் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்தார். மேலும், சிவாஜி, ஜெய் சங்கர் உள்ளிட்ட நடிகர்களுடனும் பல படங்களில் ஜெயலலிதா நடித்தார். அதன்பின் எம்.ஜி.ஆர் அரசியல் கட்சி துவங்கிய பின் அவருடன் இணைந்து பயணித்தார். கொள்கை பரப்பு செயலாளர், மத்திய மந்திரி என பதவிகளை பெற்றார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அதிமுகவை தன் கையில் எடுத்து அக்கட்சியை திறம்பட நடத்தி நாட்டின் முதலமைச்சராகவும் மாறி பெண்களுக்கு உத்வேகமாக இருந்தவர்.

jayalalitha

jayalalitha

இவரிடம் ஒருமுறை ஒரு நிருபர் ஒரு கேள்வி கேட்டார். ‘உண்மையில் உங்களின் இளம் வயதில் நீங்கள் என்னவாக வேண்டும் என ஆசைப்பட்டீர்கள்?’ என்பதுதான் அந்த கேள்வி. அதற்கு ‘எனக்கு ஆங்கில இலக்கியங்கள் மீது அதிக ஆர்வம் உண்டு. நான் சினிமாவுக்கு வராமல் போயிருந்தால் இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றிருப்பேன். உலக இலக்கியங்களை கரைத்து குடித்திருப்பேன். எனக்கு பிடித்த மற்றொரு துறை ஓவியம். ஓவிய கல்லூரியில் படித்து பெரிய ஓவிய பேராசிரியையாக மாறியிருப்பேன்.

jayalalitha

jayalalitha

மூன்றாவதாக எனக்கு பிடித்தது நடனம். பால சரஸ்வதி, யாமினி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போல் பெரிய நடன கலைஞராக வேண்டும் என்பது என் ஆசையாக இருக்கிறது. அதற்கான முயற்சியில் இப்போதும் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன். நான்காவதாக எனக்கு அரசியலுக்கு செல்லும் ஆசையும் இருக்கிறது. நான் அப்படி சென்றிருந்தால் இந்நேரம் ஒரு அரசியல் மேடையில் பேசிக்கொண்டிருப்பேன். எனக்கு பிடிக்காத ஒன்று சினிமா மட்டுமே’ என பதிலளித்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்கு இத்தனை ஆசைகள் இருந்தாலும் அரசியல்வாதி ஆக வேண்டும் என்பது மட்டுமே அவருக்கு நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாகேஷுக்கு நடிகராகும் வெறி எப்படி ஏற்பட்டது தெரியுமா?!.. இப்படி ஒரு கதை இருக்கா?!..

Next Story