தமிழ் சினிமாவில் ஃபேஷன் ஐகானாக வலம் வந்த முதல் நடிகை!.. புதிய டிரெண்டை உருவாக்கிய துணிச்சலான நடிகை!...

வெள்ளித்திரையில் வெற்றி நாயகியாக வலம் வந்தவர் ஜெயலலிதா. முதன் முதலில் ஆங்கில திரைப்படம் ஒன்றில் தான் அறிமுகமானார் ஜெயலலிதா. பின் கதாநாயகியாக கன்னடம் படம் ஒன்றில் அறிமுகமானார். தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிற ஆடை என்ற தமிழ் படத்தின் மூலம் முதன் முதலில் தமிழில் அறிமுகமானார் ஜெயலலிதா.

jaya1_cine

jayalalitha

அதை தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கிய ஜெயலலிதா சிறு வயதில் இருந்தே எம்ஜிஆர் மீது தீராத பற்றுக் கொண்டவர். அதன் மூலம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தான் எம்ஜிஆருடன் நடிக்க வாய்ப்பு ஏற்பட்டது. அந்த படம் எப்பேற்பட்ட வெற்றியை பெற்றது என அனைவரும் அறிந்த ஒன்று.

இதையும் படிங்க : காத்து வாங்குது தியேட்டர்!..ஆனா சம்பளமோ பல கோடி…ஹீரோக்களே திருந்துங்கப்பா!..

நடனம், நாட்டியம், நடிப்பு என அனைத்திலும் அசத்திய ஜெயலலிதா தமிழ் சினிமாவில் ஒரு ஃபேஷன் ஐகானாகவே வலம் வந்தார். கான்வெண்ட் பள்ளியில் படித்தவர் என்பதால் மிகவும் ஸ்டைலாக ஆங்கிலம் பேசுவதில் இருந்து அவரது உடைகளிலும் ஒரு வித்தியாசம் தெரிந்தது.

jaya2_Cine

jayalalitha

நடிக்க வந்த புதிதில் குர்தா, சிஃபான் புடவை முதல் ஸ்லீவ்லெஸ் , கவுன், ஸ்கர்ட்ஸ் போன்ற மேற்கத்திய உடைகளை அணிந்து நடித்த துணிச்சலான முதல் நடிகை ஜெயலலிதா தான். 80க்கு பிறகு அரசியல் வாசம் வந்தவுடன் மொத்தமாக புடவையில் அதுவும் கட்சிக் கொடி சின்னத்தில் பார்டர் போட்ட வெள்ளை நிற புடவைகளை அணியத்தொடங்கினார்.

அதன்பின் வெள்ளை நிற புடவைகள் பற்றி சலசலப்பு வரவே பிரைட் கலரில் ப்ரோகாட் புடவைகளை தன் உடல் முழுவதும் மறைக்கும் விதமாக அணியத்தொடங்கினார். இது பற்றியும் சில கேள்விகள் வர ஜெயலலிதா சொன்ன பதில் எனக்கு இது தான் சௌகரியமாக உள்ளது என்று பதில் அளித்தார்.

jaya3_cine

jayalalitha

பின்னர் ப்ளைன் கலரில் அதுவும் ஒரு கட்டத்திற்கு மேல் பச்சை நிற புடவைகளை மட்டுமே அணிந்து ஒரு சிறிய கல் தோடு கையில் சிறிய டயல் வைத்த கடிகாரம் என தனது டிரெண்டையே மாற்றிக் கொண்டார். மேலும் தனது டெம்ப்ளேட் ஆடைகளை தவிர வேறெந்த ஆடைகளில் இருக்கும் புகைப்படங்கள் வெளியே வராதவாறு மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டார் ஜெயலலிதா.

தனது வீட்டிற்கு யார் பார்க்க வந்தாலும் அதே டெம்ப்ளேட் ஆடை அணிந்தே வந்தவர்களை பார்க்க வருவார். இப்படி ஆடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தார் ஜெயலலிதா. ஒரு கட்டத்தில் தமிழகத்தை ஆளும் பலம் வாய்ந்த ஒரு இரும்பு பெண்மணியாகவே வாழ்ந்து மறைந்தவர். அவர் மறைந்தாலும் அவர் புகழும் பேரும் என்றைக்கும் பறைசாற்றிக் கொண்டே இருக்கும்.

jaya4_cine

jayalalitha

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it