கண்ணதாசனுக்கே வரிகளை எடுத்துக் கொடுத்த ஜெயலலிதா!.. பாட்டும் ஹிட்.. என்ன பாடல் தெரியுமா?..
தமிழ் திரையுலகில் கண்ணதாசன் எப்பேற்பட்ட ஆளுமையாக வலம் வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ் தான் அவர் மூச்சு. தமிழ் மீது அதிக பற்றுக் கொண்டவர் கண்ணதாசன். கவிஞராக மட்டுமில்லாமல் சிறந்த நாவலாசிரியராகவும் கதையாசிரியராகவும் இருந்திருக்கிறார்.
நாவல், புதினம், சிறுகதை , கட்டுரை என அனைத்து துறைகளிலும் புலமை மிக்கவராக விளங்கினார் கண்ணதாசன். சினிமாவில் பல படங்களுக்கு ஏகப்பட்ட பாடல்களை கொடுத்திருக்கிறார். அரசியல் ரீதியாக எம்ஜிஆரை கடுமையாக விமர்சித்த போதிலும் கண்ணதாசனை அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்தார் எம்ஜிஆர். அதே சமயம் எம்ஜிஆரின் நன்மதிப்பையும் பெற்றவர் கண்ணதாசன்.
அதே சமயம் பெரிய ஹீரோ என்றெல்லாம் பார்க்க மாட்டார், எதுவாக இருந்தாலும் முகத்திற்கெதிராக கேட்கக் கூடியவர். அதே வேளையில் யாரிடமும் எளிதாக பழக கூடியவராகவும் விளங்கினார். இவரின் வரிகளில் எக்கச்சக்க பாடல்கள் வந்து இன்றளவும் நம் செவியை இனிமையாக்கி வருகின்றன.
பெரும்பாலான பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். ஒரு பக்கம் கண்ணதாசன் ஒரு பக்கம் வாலி என இரு பெரும் ஆளுமைகள் பாடல் வரிகள் மூலம் சினிமாவை ஆட்கொண்டு வந்தனர். கண்ணதாசனின் தயாரிப்பில் பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதே நேரம் ஏகப்பட்ட படங்களுக்கு கதை , திரைக்கதை வசனமும் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் ஒரு பாடலில் இரண்டாம் வரி சரிவர வராததால் குழம்பிப் போயிருந்த கண்ணதாசனுக்கு தக்க சமயத்தில் உதவி செய்திருக்கிறார் ஜெயலலிதா. சிவாஜியும் ஜெயலலிதாவு சேர்ந்து நடித்த படமான ‘பட்டிக்காடா பட்டனம்மா’ படம் 1972 ஆம் ஆண்டு வெளியானது.
இந்தப் படத்தில் மிகப்பெரிய பிரபலமான பாடலான ‘கேட்டுக்கோடீ உருமி மேளம்’ பாடல். இந்தப் பாடலில் இரண்டாம் வரி சரியில்லாமல் இருந்ததாம். படக்குழுவோடு யோசித்துக் கொண்டிருந்த கண்ணதாசனிடம் ‘போட்டுக்கோடீ கோப தாளம்’ என்ற வரியை ஜெயலலிதா சொன்னாராம். அது மிகவும் பிடித்துப் போக அந்த வரியை தான் இப்போது நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இதையும் படிங்க : அஜித்திற்கு வந்த பிரச்சினைதான் இவருக்கும்!.. உண்மையிலேயே ரியல் ஹீரோதான்.. என்ன மாஸ்டர் தூள் கிளப்பிட்டீங்க!..
பாடலும் செம ஹிட். எம்.எஸ்.வி இசையில் டி.எம்.சௌந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் அமைந்த இந்தப் பாடல் இன்றளவும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் நின்று கொண்டிருக்கிறது. இந்த சுவாரஸ்ய தகவலை பழம்பெரும் இயக்குனர் மாதவன் மகனும் நடிகருமான அருள்குமார் கூறினார்.