Categories: Cinema History Cinema News latest news

ஷூட்டிங்கில் அது மட்டும் இல்லன்னா சோழி முடிஞ்சது!.. வெளிவந்த ஜெயலலிதாவின் சீக்ரெட்…

Actress Jayalalitha: அரசியலையும் தாண்டி சினிமாவிலும் ஒரு நல்ல ஆதிக்கத்தை செலுத்தினார் ஜெயலலிதா. சினிமாவிற்குள் வந்த ஆரம்பத்திலேயே அனைத்து முன்னணி நடிகைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தில் முன்னேறினார். இவர் இல்லாத எம்ஜிஆர் படங்களையே பார்க்க முடியாது.

அந்தளவுக்கு எம்ஜிஆருடன் அதிகமாக நடித்த நடிகை என்ற பெயரை பெற்றார் ஜெயலலிதா.எம்ஜிஆர் மட்டுமில்லாமல் சிவாஜி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார் ஜெயலலிதா.

இதையும் படிங்க: அல்ட்ரா லெவலில் ரெடியாகி இருக்கும் லியோ ஆடியோ ரிலீஸ் அறிவிப்பு வீடியோ…! வைரலாக்கும் விஜய் ஃபேன்ஸ்..

இந்த நிலையில் ஜெயலலிதாவிற்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த காசி ஜெயலலிதாவை பற்றி சில விஷயங்களை ஒரு பேட்டியின் போது கூறியிருக்கிறார். அதாவது ஜெயலலிதா மற்றும் அவரது தாய் சந்தியாவுக்கு ஆடைகளை தைத்துக் கொடுப்பாராம் காசி.

இவரை பார்த்தாலே ஜெயலலிதாவுக்கு சிரிப்புத்தான் வருமாம். அந்தளவுக்கு கிராமத்தில் இருந்து வந்த காசி வெளி உலக நடப்புகளை பற்றி தெரியாமல் வெள்ளந்தியாக பழகுவது ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடிக்குமாம்.

இதையும் படிங்க: ஒரே படத்தில் வில்லனாக நடித்த ரஜினி, கமல்! அப்போ ஹீரோ யாரு? சொன்னா ஆச்சரியப்படுவீங்க

எப்போதுமே ஜெயலலிதா செண்ட் அடிக்காமல் வரமாட்டாராம். அதுவும் மேல் இருந்து கால் வரை முழுவதும் செண்ட் அடித்துவிட்டுதான் வருவாராம். அதுமட்டுமில்லாமல் மேக்கப் போடும் போதும் சரி ஆடைகளை அணியும் போதும் சரி ஜான்சன் அன் ஜான்சன் பவுடர்தான் போடுவாராம்.

அதனால் படப்பிடிப்பிற்கு பெரிய ஜான்சன் பவுடர் டப்பாவை தூக்கிக் கொண்டுதான் போகனுமாம். ஒரு வேளை அந்தப் பவுடரை மறந்து விட்டு வந்தால் கையில் கிடைக்கிறத தூக்கி எறிவாராம் ஜெயலலிதா. வேறொரு பவுடரை கொடுத்தாலும் போட்டுக் கொள்ள மாட்டாராம்.

இதையும் படிங்க: அந்த அழகை பாத்து சொக்கி போயிட்டோம்!.. ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் ஸ்ருதி ஹாசன்…

 

Published by
Rohini