ஜெயலலிதா நடிக்க இருந்த ஆக்‌ஷன் படம்!.. ஹீரோ யாருனு தெரியுமா?.. ஆனால் பேர் வாங்கியதோ வேறொரு நடிகை..

by Rohini |
jaya
X

jayalalitha

தமிழ் சினிமாவில் அந்தக் காலத்திலேயே மிகவும் ஸ்டைலிஷான நடிகை என்று பேர் வாங்கியவர் நடிகை ஜெயலலிதா. இவர் வந்தபிறகு சினிமாவில் மற்றுமொரு பரிணாமம் தோன்றியது எனலாம்.ஸ்லீவ்லெஸ் ஆடை, சிறிது கவர்ச்சி என அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார். கான்வெண்டில் படித்தவராதலால் ஆங்கிலமும் சரளமாக பேசக்கூடிய நடிகையாக திகழ்ந்தார்.

jaya1

jayalalitha

ஆனால் அவ்ளோ சீக்கிரம் யாருடனும் பேசமாட்டாராம். படப்பிடிப்பில் அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று தான் இருப்பாராம். ‘வெண்ணிறாடை’ படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமான ஜெயலலிதா அந்தப் படத்தின் வெற்றி பல படங்களின் வாய்ப்புகளை அவருக்கு கொடுத்தது. தனது இரண்டாவது படத்திலேயே எம்ஜிஆருக்கு ஜோடியானார் ஜெயலலிதா.

யாரை திரையில் பார்த்து பார்த்து ரசித்தாரோ அவருக்கு ஜோடியாகவே தனது இரண்டாது படத்தின் மூலம் நடிகையானார். அந்த திரை ஜோடியை பார்த்து ரசித்த ரசிகர்கள் இருவரையும் பல படங்களில் ஜோடியாக்கினர். கிட்டத்தட்ட 28 படங்கள் எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருக்கிறார்.

jaya2

jayalalitha mgr

ஒரு கட்டத்தில் எம்ஜிஆருடனேயே அரசியலிலும் பயணிக்கத் தொடங்கியவர் அதன் பின் வந்தப் படங்களை எல்லாம் நிராகரித்து வந்தார். அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு விலகினார் ஜெயலலிதா. அப்படி வந்தப் படம் தான் ‘பில்லா’. அந்தப் படத்தில் ஸ்ரீபிரியா நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் ஜெயலலிதாவைத் தான் கேட்டிருந்தார்கள்.

ஆனால் அப்போது ஜெயலலிதா அரசியலில் ஆர்வம் காட்ட தொடங்கியதால் அந்தப் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லையாம். இதைப் பற்றி ஸ்ரீபிரியாவிடம் கேட்டதற்கு ‘ நான் நடிக்கும் சமயத்தில் எனக்கு இதை பற்றி தெரியாது, ஆனால் கொஞ்ச நாள்கள் கழித்து சொன்னார்கள், இந்த கதாபாத்திரத்தில் ஜெயலலிதா நடிக்க வேண்டியது என்று. ஆனால் அதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது, ஜெயலலிதாவிற்கு பிறகு அடுத்த சாய்ஸ் நான் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று ஸ்ரீபிரியா கூறினார்.

jaya3

jayalalitha rajini

மேலும் பில்லா படத்தில் ஸ்ரீபிரியா சில ஆக்‌ஷன் காட்சிகளிலும் கலக்கியிருப்பார். அவரும் அந்தப் படத்தில் மிகவும் ஸ்டைலிஷாக காட்சியளித்திருப்பார். ஜெயலலிதா மட்டும் இந்தப் படத்தில் நடித்திருந்தால் ஒரு ஆக்‌ஷன் நாயகியாகவும் ரசிகர்கள் அவரை ரசித்திருப்பர். மேலும் ரஜினியின் கெரியரையே தூக்கி நிறுத்திய படமாகவும் ‘பில்லா’ அமைந்தது.

இதையும் படிங்க : ஆரம்பிச்சுட்டாங்கய்யா போட்டிய!.. விஜயை பின் தொடரும் அஜித்.. லேட்டா வந்தாலும் விடமாட்டோம்ல!..

Next Story