40 வருடங்கள் சவுகார் ஜானகியுடன் பேசாமல் இருந்த ஜெயலலிதா!..அதுவும் யாருக்காக தெரியுமா?..

by Rohini |
jaya_main_cine
X

சினிமாவை பொருத்தவரைக்கும் நடிகர், நடிகைகளுக்கு இடையே போட்டி , பொறாமைகள் இருப்பது சகஜம் தான். ஆனால் அது காலப்போக்கில் பனித்துளி போல மறைந்து போகக்கூடும். ஆனால் ஒரு சின்ன பிரச்சினையால் அந்த கால நடிகைகளான ஜெயலலிதாவும் சவுகார் ஜானகியும் 40 வருடங்கள் பேசாமலே இருந்திருக்கின்றனர்.

jaya1_cine

சவுகார் ஜானகி பெரும்பாலும் சிவாஜி கணேசனுடன் அதிக படங்களில் நடித்தவர். ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்தவர். ஒளிவிளக்கு என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஜெயலலிதாவும் சவுகார் ஜானகியும் முதன் முதலாக நடிக்கின்றனர்.

இதையும் படிங்க : சிவாஜி, தர்பார் படங்களுக்கு ப்ளான் போட்ட லிங்குசாமி… ஆனா அவரையே தட்டிவிட்ட முக்கிய பிரபலம்…

jaya2_cine

அந்த கால நடிகைகளில் சவுகார் ஜானகிதான் சீனியர். அதன் காரணமாக அவர் பெயர் தான் முதலில் வரவேண்டும் என எண்ணினாராம் சவுகார். ஆனால் ஜெயலலிதா ஏற்கெனவே எம்.ஜி.ஆருடன் நிறைய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்ததனால் டைட்டில் கார்டில் எம்.ஜி.ஆருக்கு பின்னால் ஜெயலலிதா பெயர் தான் வர வேண்டும் என நிபந்தனை போட்டே நடிக்க வந்திருக்கிறார் ஜெயலலிதா.

jaya3_cine

இதுவே காலப்போக்கில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து அதிலிருந்து இருவருமே 40 வருடங்களாக பேசிக்கொள்ளவில்லையாம். இதை அடுத்து இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க படப்பிடிப்பில் கூட பேசிக்கொள்ள மாட்டார்களாம். அதன் பின் ஜெயலலிதா முதலமைச்சர் ஆகி ஜெயா தொலைக்காட்சியை ஆரம்பித்து மனம் விரும்புதே என்ற நிகழ்ச்சியை அந்நிறுவனம் நடத்திய போது சவுகார் அதில் பங்கேற்று இந்த சம்பவத்தை பற்றி பேசியிருக்கிறார்.ஏதோ அறியாத வயதில் நிகழ்ந்த சம்பவம் அது என்று சொல்ல இதை பார்த்த ஜெயலலிதா சவுகாருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி அனுப்பி வைத்தாராம். ஒரு சமயம் சித்ரா லட்சுமணன் சவுகார் ஜானகியை சந்தித்து பேசிய போது ஏன் இன்னும் ஜெயலலிதாவை சந்தித்து பேசவில்லை எனக் கேட்டாராம். அதற்கு சவுகார் ஜெயலலிதாவை சந்திக்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கூறினாராம்.

Next Story