மீண்டும் சிறுமியானால் அதை செய்யவே மாட்டேன்!.. ஜெயலலிதா சொன்னது எதை தெரியுமா?..
சினிமாவில் நடிக்க துவங்கி பின்னாளில் அரசியலிலும் நுழைந்து அரசியல் தலைவியாகவும் மாறி அதிமுகவை வழி நடத்தி முதலமைச்சராகவும் கலக்கியவர் ஜெயலலிதா. கட்சியை ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், ஆளுமை மிக்கவர், தைரியமான பெண்மணி என இவரை பலரும் அழைத்தனர். இவரின் மரணம்தான் தமிழ்நாட்டில் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் அதிகமாக விவாதிக்கப்பட்டது.
சினிமா, அரசியல் என அவர் கலக்கினாலும் உண்மையில் இந்த இரண்டிலுமே அவர் ஆர்வம் இல்லாமல்தான் இருந்துள்ளார். நன்றாக படித்து ஒரு பேராசிரியை அல்லது எழுத்தாளர் ஆக வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்துள்ளது. ஆனால், அவரின் குடும்ப சூழ்நிலை அவரை நடிகையாக மாற்றியது. அவரின் அம்மா சந்தியா கருப்பு வெள்ளை படங்களில் திரைப்படங்களில் நடித்தவர். எனவே, படப்பிடிப்பு சென்றுவிடுவதால் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர். தாய் பாசத்துக்காக ஏங்கியவர்.
சினிமாவில் நடிக்கும்போது தான் அரசியல்வாதி ஆவேன் என கனவிலும் நினைக்கவில்லை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதேபோல், தான் நடித்த திரைப்படங்களில் நடனம் ஆடியிருந்தாலும் உண்மையில் நடனம் பிடிக்காதவராகத்தான் ஜெயலலிதா இருந்துள்ளார். அம்மாவின் வற்புறுத்தலால் பிடிக்காத பரதநாட்டியத்தை கற்றுக்கொண்டாராம். தான் மீண்டும் சிறுமியானால் நாட்டியம் கற்றுக்கொள்ள மாட்டேன் என அம்மாவிடம் சொல்வேன் என அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அம்மாவின் வற்புறுத்தலால் பரதநாட்டியம் கற்றுக்கொண்ட ஜெயலலிதா மேடையில் அரங்கேற்றம் செய்து பாராட்டை பெற்று, பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குக் வித் கோமாளியில் இருந்து விரட்டப்பட்டவருக்கு அடைக்கலம் தந்த விஷால்… என்ன மனுஷன்யா!!