Connect with us
jaya

Cinema News

குஷ்பூவின் அந்த பிரச்சினையை தீர்த்து வைத்ததே ஜெயலலிதாதான்! சுந்தர் சி சொன்ன சீக்ரெட்

Actress Khusboo: கோலிவுட்டில் 80 90களில் ஒரு கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ. ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மிகப் பெரிய அளவில் புகழ்பெற்றவர். வேற எந்த நடிகைக்கும் இல்லாத ஒரு பெருமை குஷ்புவிற்கு உண்டு. இவருக்காக இவருடைய ரசிகர்கள் கோயில் எடுத்த சம்பவம் எல்லாம் அரங்கேறி இருக்கிறது.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,ஹிந்தி போன்ற பிறமொழிகளிலும் குஷ்பூ பல படங்களில் நடித்திருக்கிறார். மிகவும் உச்சம் தொட்ட நடிகையாகவே குஷ்பூ இருந்து வந்தார். அதன் பிறகு இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்புவிற்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தற்போது குஷ்பூ சினிமாவை விட்டு அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை திட்டினாலும் பாடல் வரிகளை மாற்றி கொடுத்த கண்ணதாசன்!.. செம ஹிட் பாட்டாச்சே!.,.

அரசியலில் மிக முக்கியமான பொறுப்பில் இருந்து வருகிறார் குஷ்பூ. இந்த நிலையில் சுந்தர் சி சமீபத்திய ஒரு பேட்டியில் குஷ்பு மீதான ஒரு சர்ச்சையை பற்றி ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது பாவம் என்ற எண்ணத்தில் இருந்து சமூகம் விடுதலை பெற வேண்டும் என்பதாக குஷ்பு தெரிவித்த கருத்து தமிழக பெண்களுக்கு கற்பு தேவையில்லை என்பதாக எதிரொலிக்க இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது,

அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பெண்களும் செருப்பு, துடைப்பம் போன்ற அனைத்தையும் தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல இடங்களில் குஷ்புவை கண்டித்து அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் நடந்தன. இந்த விவகாரம் பொதுமக்களிடமும் பெண் ஆர்வலர்கள் இடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு குஷ்பூ தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்பும் கேட்டார்.

இதையும் படிங்க: எனக்காக ஒரு பாட்டு பாடுங்க! வைரலாகும் வீடியோ.. அன்னையர் தினத்தில் ஷோபாவை சர்ப்ரைஸ் செய்த விஜய்

ஆனால் இந்த மன்னிப்புக்கு பின்னணியில் இருந்தவர் ஜெயலலிதா தான் என சுந்தர் சி கூறினார். இந்த சம்பவத்தை பற்றி கூறிய சுந்தர்சி தமிழக பெண்களுக்கு கருப்பு கிடையாது என்று எந்த முட்டாளாவது சொல்ல முடியுமா? ஆனால் குஸ்பு சொன்னதாக பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளியான போது பெரும் சர்ச்சையாக மாறியது. பூகம்பமே கிளம்பியது. ஆனால் குஷ்பூ இந்த மாதிரி நான் சொல்லவே இல்லை என அவர் மன்றாடினார்.

அவருக்கு பக்கபலமாக அந்த நேரத்தில் துணையாக இருந்தது நான் மட்டுமே. மேலும் அந்த நேரத்தில் நானும் என் மனைவி குஷ்புவும் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தோம். அந்த நேரத்தில் எங்களுக்கு ஆறுதலாக இருந்தது அம்மையார் ஜெயலலிதா மட்டுமே. அவர்தான் இந்த பிரச்சனை அரசியல் ரீதியாக பெரும் பிரச்சனையாக மாறிக் கொண்டிருக்கின்றது. அதனால் சின்னதாக மன்னிப்பு ஒன்றை கேட்க சொல்லுங்கள் என அவர் கூறினாராம். அதேபோல் குஷ்புமும் நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் என்னை மன்னித்து விடுங்கள் என ஒரு பதிவை வெளியிட்டார். ஆனால் அந்த நேரத்தில் மிகவும் மனது உடைந்து அழுது கொண்டே தான் இருந்தார் என சுந்தர் சி கூறினார்.

இதையும் படிங்க: மனோஜை லாக் செய்த முத்து… ரோகிணி உங்களுக்கு வாய் கொஞ்சம் அதிகம் தான்…

google news
Continue Reading

More in Cinema News

To Top