நீங்கள் அவரை காதலித்தீர்களா?.. கேள்வி கேட்ட நிரூபரை ஆச்சரியப்படுத்திய ஜெயலலிதா..
தமிழ் சினிமாவில் ஆச்சரியமூட்டும் பெண்மணியாக திகழ்ந்தவர் நடிகை ஜெயலலிதா. துணிச்சலான எண்ணம், எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் திறன், சாமர்த்தியமான நடிப்பு, கவர்ச்சியூட்டும் நளினம் என அத்தனை அம்சங்களும் பொருந்தி நின்ற பெண்ணாக இருந்தார் ஜெயலலிதா.
நடிகைகளுக்கு மத்தியில் வித்தியாசமான நடை உடை பாவனையுடன் மின்னினார் ஜெயலலிதா. படிப்பு, நடனம், நடிப்பு என அனைத்தும் சற்று கூடுதலாகவே அமைந்திருந்தது இவரிடம். உடம்பை போர்த்தி நடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் புது டிரெண்டாக வந்து நின்றார் ஜெயலலிதா.
இதையும் படிங்க : சென்னைக் காளையர்கள் தயாராகிக்கோங்க!.. யாருக்காவது தோணுச்சா?.. அதுதான் கமல்!.. எங்கேனு தெரியுமா?..
ஸ்லீவ் உடை, டைட் பேண்ட், குர்தா என மாடர்ன் கேர்ளாக ஜொலித்தார். அதனாலேயே அனைவரின் கண்ணும் இவர் மேலேயே இருந்தது. அந்த காலத்தில் ஜெயலலிதா அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்த நடிகர் புரட்சித்தலைவர்தான். கிட்டத்தட்ட 28 படங்களில் எம்ஜிஆருடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.
இதனால் அவர்களுக்கு இடையில் கிசுகிசுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதை பற்றி ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில் பேட்டியளிக்கும் போது ‘எம்ஜிஆரை நீங்கள் காதிலித்தீர்களா’ என்று நீரூபர் கேட்டார். அதற்கு பதிலளித்த ஜெயலலிதா ‘எம்ஜிஆரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள், அப்படி ஒரு ஈர்ப்பு உள்ளவர் எம்ஜிஆர் நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே எம்ஜிஆரின் படங்களை பார்த்து வியந்தவள்.
என் தாயார் மறைவிற்கு பின் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பியவர் அவர்தான், என் மீது அக்கறையும் அன்பும் கொண்டவராக காலம் முழுவதும் இருந்தார். என் வாழ்க்கையில் என்னை ஆதிக்கம் செலுத்தியவர்கள் இருவர். ஒன்று என் அம்மா, மற்றொருவர் எம்ஜிஆர். என் வாழ்க்கையில் நண்பன், தந்தை, தாய், குரு, வழிகாட்டி என எல்லாமுமாக இருந்தவர் எம்ஜிஆர் தான்’ என்று தனது ஆழ்ந்த நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் ஜெயலலிதா.