இந்த படத்துலயே சினிமாவுக்கு முழுக்கு போட நினைத்த ஜெயலலிதா!..கடைசில என்னாச்சுனு தெரியுமா?..
தமிழ் சினிமாவில் ஒரு வீரப்பெண்மணியாக தைரிய பெண்மணியாக வலம் வந்தவர் நடிகை ஜெயலலிதா. இவரின் தாயாரான சந்தியாவும் ஒரு நடிகை தான். தன் தந்தை விட்டுட்டு போனதுக்கு அப்புறம் தாயாரின் அரவணைப்பில் இருந்த ஜெயலலிதா அம்மாவின் பாசத்திற்காக ஏங்கியவர்.
தாயாரான சந்தியா சிவாஜியுடன் ஒரு சில படங்களில் ஜோடியாக நடித்தாலும் திடீரென அதே சிவாஜிக்கு தாயாக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விருப்பமில்லாமல் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடிக்க போய்விட்டார் சந்தியா. அதன்பின் உரிய நட்சத்திர அந்தஸ்தை பெறமுடியாமல் தவித்த சந்தியா குடும்ப சூழ்நிலைக்காக ஜெயலலிதாவை நடிகையாக்கியிருக்கிறார்.
இதையும் படிங்க : சூர்யாவுக்கு ஐஸ் வைத்து நினைத்ததை முடித்த கார்த்தி… வாயுள்ள பிள்ளை பிழைச்சிக்கும்!!
முதலில் விருப்பமில்லாமல் தான் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் ஜெயலலிதா. அவர் நடித்த முதல் படமான வெண்ணிறாடை படத்திலேயே நடித்து விட்டு இதற்கு பிறகு என்னால் நடிக்க முடியாது, என்னை விட்டு விடுங்கள் என்றெல்லாம் கூறியிருக்கிறாராம் ஜெயலலிதா.
அவருக்கு கலெக்டராக வேண்டும், பிஸினஸ் பண்ணவேண்டும் என்று தான் எண்ணமாக இருந்திருக்கிறதாம். ஏற்கெனவே சிறு வயதில் இருந்தே எம்.ஜி.ஆரின் மீது பற்றுக் கொண்ட ஜெயலலிதா ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்க வாய்ப்பு வர அந்த படத்திற்கு பிறகு தான் தன்னுடைய வளர்ச்சியை அறிந்து சினிமாவிலேயே கொடி கட்டி பறந்தார். இதை அவர் கூடவே நண்பராக இருந்தவரும் பல நாடகங்களில் நடித்தவருமான ஏஆர்.ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.