அந்த சீன் இருக்குறதயே மறந்து படம் பார்க்க வரச் சொன்ன இயக்குனர்! படத்தை பார்த்த ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா?

jaya
தமிழ் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி ஒரு ஆதிக்கம் உள்ள பெண்மணியாக வலம் வந்தவர் செல்வி ஜெயலலிதா. பன்முகத்திறமை கொண்ட நடிகை என்று சந்தேகமில்லாமல் ஜெயலலிதாவை சொல்லலாம். நன்றாக ஆடக்கூடியர்.
நன்றாக நடிக்கக் கூடியவர், நன்றாக பாடக்கூடியவர் என சினிமாவிற்காகவே தன்னை செதுக்கிக் கொண்டவர். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா என்றால் படையும் நடுங்கும் என்ற நிலைக்கு சினிமாவை மாற்றினார் ஜெயலலிதா.
இதையும் படிங்க : ஒல்லிக்குச்சி உடம்பா மாறிய குண்டான நடிகைகள்! வாய்ப்புக்காக பண்ணப் போய் இப்படி ஆயிடுச்சே
அந்தளவுக்கு ஒரு தைரியமான நடிகையாக, எதையும் முகத்துக்கு எதிராக பேசக்கூடியவாகவும் விளங்கினார். அரசியலில் ஆரம்பத்தில் பல சறுக்கல்களை கண்டார். அதன் பிறகு எதையும் தலைக்கு ஏற்றாமல் முயன்று போராடி ஒரு நல்ல இடத்திற்கு வந்தார்.
ஜெயலலிதா என்றாலே அனைவரின் மத்தியில் ஒரு மரியாதை கலந்த பயம் இருக்கத்தான் செய்தது. அவரை பகைத்துக் கொண்டால் அரசியல் ரீதியாக பதிலடி கொடுத்து வந்தார் ஜெயலலிதா.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் பி.வாசு ஜெயலலிதாவை பற்றி ஒரு சம்பவத்தை கூறினார். அவர் இயக்கிய வால்டர் வெற்றிவேல் படத்தை பார்க்க ஜெயலலிதாவை வரச்சொன்னாராம். ஆனால் கூட இருந்தவர்கள் அந்த அம்மாவ ஏன் வரச் சொன்ன? என்று கேட்டார்களாம்.
ஏனெனில் படத்தில் போலீஸாக நடித்திருக்கும் சத்யராஜ் ஒரு காட்சியில் மந்திரியை செருப்பால அடிக்கும் படியான காட்சியாம். இதை பார்த்து அந்த அம்மா எதுவும் சொல்லிட்டா என்ன பண்றது என்ற பீதியில் இருந்திருக்கின்றனர்.

jaya1
ஆனால் படத்தை பார்த்துவிட்டு ஜெயலலிதா ரொம்ப நன்றாக இருக்கிறது என்றும் ஒரு மந்திரி எப்படி இருக்க வேண்டும் , எப்படி இருக்க கூடாது என்றும் அதே போல ஒரு போலீஸ்காரர் எப்படி இருக்க வேண்டும் , எப்படி இருக்கக் கூடாது என்றும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள் என்று சொல்லி வாழ்த்தினாராம்.
இதையும் படிங்க : தயவு செய்து ‘ஜெய்லர்’ படத்தை பத்தி தப்பா எதுவும் பேசிறாதீங்க! தியேட்டரில் நடந்த அசாம்பாவிதம்
அதே போல ரஜினி நடித்த மன்னன் திரைப்படத்தை பார்த்து அதில் விஜயசாந்தி கேரக்டரை மிகவும் ரசித்துப் பார்த்தாராம் ஜெயலலிதா. இதை ஒரு பேட்டியில் பி. வாசு கூறினார்.